மெய்வல்லுநர் போட்டிகளில் அதிசிறந்த வீரர்களைத் தெரிவதற்கான பொறிமுறை ஒரு போட்டியாளர் தனது வயதுப்பிரிவில் அதிசிறந்த வீரராகத் திகழ்வதற்கு பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தனது வயதுப்பிரிவில், மூன்று தனி விளையாட்டுக்களில் பங்குபற்றியிருத்தல் வேண்டும் ஒரு மைதான விளையாட்டு (Field event) 10 இரண்டு சுவட்டு விளையாட்டுகள் (Track events) அல்லது ஒரு சுவட்டு விளையாட்டு (Track events) 10 இரண்டு மைதான விளையாட்டுகள் (Field event) மூன்று விளையாட்டுக்களிலும் வெற்றியீட்டியிருத்தல் வேண்டும் (முதல் மூன்று இடங்களிற்குள் வருதல்). கிடைக்கப்பெற்ற இடங்களின் அடிப்படையில் கூடுதலான புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். முதலாம் இடம்: 5 புள்ளிகள் இரண்டாம் இடம்: 3 புள்ளிகள் மூன்றாம் இடம்: 1 புள்ளி ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் சமமான அதிகூடிய புள்ளிகளைப் பெறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அதிசிறந்த வீரர்களாகத் தெரிவுசெய்யப்படுவர்.