யேர்மனியிலும் அனைத்துலகப் பொதுத்தேரவு – 2014 June 7, 2014 Uncategorized யேர்மனியிலும் அனைத்துலகப் பொதுத்தேரவு – 2014 தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் தமிழ்ச்சிறார்களுக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிமாலயங்கள் ஊடாகத் தமிழ் மொழியைக் கற்பித்துவரும் யேர்மனி தமிழ்க் கல்விக் கழகம் வழமைபோன்று இவ்வாண்டும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை அனைத்துலக மட்டத்தில் நடாத்தும் பொதுத்தேர்வில் பங்குபற்றியுள்ளது. யேர்மனி முழுவதிலும் பரந்து விரிந்துள்ள 100 க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பயிலும் 6000 க்கு மேற்பட்ட மாணவர்களில் 5329 மாணவர்கள் மேற்படி அனைத்துலகப் பொதுத் தேர்வில் இன்று ஆர்வத்துடன் தேர்வெழுதியுள்ளதாகக் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு.செ.லோகன் அவர்கள் அறியத்தந்துள்ளார்.