இஸ்லாமிய தமிழ் மக்கள் மீதான படுகொலைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடாத்திய போராட்டம்

இஸ்லாமிய தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த போினவாதம் மேற்கொண்ட படுகொலைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை யாழ் பஸ் நிலையம் முன்பாக மேற்கொள்ளப்பட்ட மேற்படி போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை அமைச்சா் ஜங்கரநேசன் ஆகியோா் தலைமை தாங்கினா்.

மேற்படி போராட்டத்தில் பெருமளவான தமிழ் முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டனா்.