அன்பான தமிழீழ உறவுகளே!

வரலாறு எமக்குத்தந்த பாடங்களால் ஆரம்பிக்கப்பட்ட எமது தேசிய
விடுதலைப்போராட்டமானது நமது தேசியத்தலைவரின் வழி காட்டலினாலும்
ஆயிரமாயிரம் வேங்கைகளின் தியாகத்தாலும் அரசியல் ஆயுதப்போராட்டமாக
வீறுநடைபோட்டபோது ஏகாதிபத்திய வல்லூறுகளாலும் பிராந்திய
ஆதிக்கப்பேய்களாலும் கருவறுக்கப்பட்டது. ஆனாலும்விடுதலை நோக்கிய
எமது இலட்சியம்என்ற கரு சிதையாமல்மென்மேலும் எமது மனங்களில்
வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆயிரமாயிரம் மாவீரர்கள் எம்மிடம்
விட்டுச்சென்ற எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை அரசியல்என்ற
ஆயுதமேந்தி தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய கடைமைப்பாடு எம்மிடம்
கையளிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய புதிய உலக ஒழுங்கில்நவீன இலத்திரனியல் உலகத்தோடு நாமும்
எமது விடுதலைக்கான நகர்வை முன்னோக்கி நகர்த்துவதாயின் இணைய
வலையமைப்பை சரியானமுறையில் பயன்படுத்தவேண்டிய கட்டாய கால
சூழலில் இருக்கிறோம்.

புலம்பெயர்தேசத்தில் எமது விடுதலைப்போராட்டத்தை தொடர்ந்து
நகர்த்திச்செல்லும்உத்தியோகபூர்வ அமைப்பான தமிழர்ஒருங்கிணைப்புக்
குழுவிற்கான ஒரு இணையவலைத்தளம்இங்கே உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் எமது விடுதலை நோக்கிய நகர்வின் தகவல்கள்,
பதிவுகள், கருத்துப்பகிர்வுகள், மற்றும்பல அம்சங்கள் இங்கே
பதிவேற்றப்படும். இதற்கான உங்கள் ஆலோசனைகளும் ஆதரவும் அன்போடு
எதிர்பார்க்கப்படுகின்றன.

நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்