மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2014

மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா –  21.06.2014

ஒஸ்லோ ஸ்ரொவ்னர் விளையாட்டுமைதானத்தில் (21.06.14) சனி காலை 9.00 மணிக்கு தமிழீழ நோர்வேஜிய தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, அகவணக்கம் செலுத்தப்பட்டு, தமிழர் விளையாட்டு விழா குதாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

சீரான காலநிலை, கழகங்களின் வீர வீராங்கனைகளின் உற்சாகமான பங்களிப்பு, நடுவர்களாக இளையவர்கள் ஆற்றிய சிறப்புப்பணி ஆகிய சிறப்பம்சங்களுடன் மிகவும் அமைதியான முறையில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சுவைமிகு உணவுப்பரிமாற்றமும், இளையவர்கள் பார்வையாளர்களை மகிழ்விக்க நடாத்திய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விளையாட்டுக்களும் இவ் விளையாட்டுவிழாவுக்கு மேலும் மெருகூட்டியிருந்தது.

தேசியக்கொடிகள் இறக்கும் வைபவத்துடன் முதல்நாள் விளையாட்டு விழாவானது சிறப்பாக நடைபெற்று நிறைவு கண்டது.

தொடர்ந்து இரண்டாம் நாள் விளையாட்டு விழா மிகவும் விறு விறுப்பான விளையாட்டுக்களுடன் நாளை 22.06.14 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு தேசியக்கொடிகள் ஏற்றலுடன் ஆரம்பித்த வைக்கப்படும்.

 

மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா நோர்வே – 22.06. 2014

21.06.14 ச னிக் கிழமையின் தொடற்சியாக 22.06.14 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழர்விளையாட்டு விழா மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நேற்றைய தினத்தைவிடவும் இன்று பார்வையாளர்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த விளையாட்டு விழாவுக்கு கழகங்களின் உற்சாகமான ஒத்துழைப்பு விழாவை சிறப்படன் நகர்த்திச் செல்ல உறுதுணையாக இருந்தது.

மதியம் 12.00 மணியளவில் கழகங்களின் வீர வீராங்கனைகளின் மரதன் ஓட்டம் தமிழர் வள ஆலோசனை மைய வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பார்வையாளரகள்; கழகங்கங்கள் ஆகியோர் பலத்த கரகோச மெழுப்பி வரவேற்றுக்கொள்ள வீரர்கள் விளையாட்டு விழா மைதானத்தை வந்தடைந்தனர்.

அதன் பின்னர் கழகங்களினது அணி வகுப்பினர் விழையாட்டுக்குழு இளையவர்கள், பணியாளர்கள் ஆகியோருடன் கொடிக்கம்பத்தின் அருகேவந்து இணைந்துகொண்டனர். கழகங்களினது வீரர்கள் தீபமேந்தி மைதானத்தை வலம்வந்து சுடரேற்றிவைக்க, வருடாவரும் சிறப்பாக நடைபெறும் அணிவகுப்பு சிறார்கள் தமிழீழ தேசியக்கொடியை கைகளில் ஏந்தி மைதானத்தை வலம்வந்த காட்சி மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. தொடர்ந்த தாயகத்து நினைவுகளை மீட்டுப்பார்க்கும் கவிதைமொழியப்பட சிவப்பு மஞ்சள் நிற பலூன்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டது. அப்படிப்பறக்கவிடப்பட்ட பலூன் எம்தாயகத்து உறவுகளுக்கு நாம் என்றும் உங்களுக்காக குரல்கொடுப்போம் என்ற செய்தியை எம்மிடமிருந்து எடுத்துச் செல்வதாக உணரக்கூடியதாக இருந்தது.

இன்றைய விளையாட்டின் சிறப்பு அம்சங்களாக அஞ்சலோட்டம், கயிறுழுத்தல், பார்வையாளர்களுக்கான தாயகத்து நினைவுகளை மீட்டுப்பார்க்கும் தேங்காய்திருவுதல், துவிச்சக்கரவண்டியின் சக்கரம் உருட்டிச் செல்லுதல் போன்ற விளையாட்டுக்கள் அமைந்திருந்தன.

பசிக்கு விருந்தாக மிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் மகளிர் அமைப்பு ஆகியோர் இணைந்து வாய்க்கு சுவையான அப்பம், தோசை, கூழ்போன்ற, உணவுவகைகளை, விற்பனை செய்தார்கள். இளையவர்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விளையாட்டுக்கள் இன்றும் நடைபெற்றது.

தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு வெற்றிக்கிண்ணங்கள் பரிசளிக்ப்பட்டு விளையாட்டு விழா மகிழ்வாக நிறைவடைந்தது.