இலங்கையில் இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழத்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக கனடாவின் தலைநகர் ரொறன்ரோவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த கண்டன எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடவில் வசிக்கும் தமிழ் மக்களும், இஸ்லாமிய தமிழ் மக்களும் இணைந்து நேற்று ஞாயிறன்று நடாத்தினர்.
கனடாவில் இஸ்லாமிய தமிழர்கள், ஈழத்தமிழர்களுடன் இணைந்து நடத்திய இலங்கை அரச அடக்குமுறைககு எதிரான முதல் நிகழ்வாக இது பதிவாகியுள்ளது.