கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் இணையத்தளத்தில், அளுத்கம, பேருவளைப் பகுதிகளில், நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டிருந்தது.
வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், சட்டம், ஒழுங்கைப் பேணி, மக்களையும், வழிபாட்டு இடங்களையும், பாதுகாக்குமாறும், வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறும் அமெரிக்கா கோரியிருந்தது.

இந்த அறிக்கையின் கீழ், கருத்துப் பகுதியில், பொது பல சேனாவின் பொதுச்செயலர் அத்தே ஞானசார தேரர் உள்ளிட்டோருடன் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிற்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் கீழ், இலங்கையின் பொதுபல சேனா தீவிரவாதிகளுடன் இலங்கு அதிபரின் சகோதரர் – பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச என்று விளக்கக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இலங்கை அரசதரப்பினால் அமெரிக்க தூதரகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்தப் படம் மற்றும் விளக்கக்குறிப்பை நீக்க அமெரிக்கத் தூதரகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

 

The U.S. Embassy condemns the violence that has spread over the weekend in Aluthgama and Beruwela. We urge the government to ensure that order is preserved and the lives of all citizens, places of worship, and property are protected. We urge the authorities to investigate these attacks and bring those responsible to justice. We also urge all sides to refrain from violence, exercise restraint, and respect the rule of law.

Source: Sri Lanka – U.S. Embassy