“போர்க்களத்தில் ஒரு பூ” திரைப்படம் இனப்படுகொலையின் சாட்சியாக பேசும் – இயக்குனர் கணேசன்! June 28, 2014 News “போர்க்களத்தில் ஒரு பூ” என்ற திரைப்படம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் சாட்சியின் ஆதாரமாக திகழும் என்று படத்தின் இயக்குனர் கு.கணேசன் தெரிவித்துள்ளார்.அன்பார்ந்த தமிழ் உறவுகள் அனைவருக்கும்! எனது பணிவான வணக்கம். ஈழத்தில் நடந்த மிகப்பெரும் இனப்படுகொலை உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல மனிதகுலம் அறிந்த ஒன்று இன்னும் அது தமிழர்கள் மனதில் ஆறாத காயமாக இருக்கின்றது.ஈழத்தில் எத்தனை தமிழர்களின் உயிர் குடிக்கப்பட்டது, எத்தனை போ் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள் என்பதை உலகம் அறியும், இப்படித்தான் யூத இனத்தை அழித்த கிட்லரின் கொடுமையினை உலகம் அறிந்தது அப்படித்தான்.ராஜபக்சவின் கொடூரத்தையும் இந்த உலகம் அறிந்தது.ஆனால் யூத இனத்திற்கா யூத விடுதலைக்காக யூதர்கள் அழிக்கப்பட்ட பின் உலகில் பல திரைக்காவியங்கள் யூத இனத்திற்காக எடுக்கப்ட்டது. இது உலகம் அறிந்த உண்மை. அப்படித்தான் தமிழில் ஈழத்தமிழ் இனப்படுகொலையினை பதிவு செய்ய கர்நாடக மாநிலத்தில் பிறந்த நான் பல ஆவலுடன் முன்வந்துள்ளேன்.“போர்க்களத்தில் ஒரு பூ”வாக ஒரு ஊடக போராளியாக இருந்த இசைப்பிரியாவின் வரலாறைத்தான் ஆதாரமாக கொண்டு எழுதப்பட்ட கதைதான் “போர்க்களத்தில் ஒரு பூ”.இந்த காவியம் இனப்படுகொலை சாட்சிக்கு ஒரு ஆதாரமாக இருக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் போய்ச்சேரும். ஈழவிடுதலைக்கு ஒரு எழுச்சியை கொடுக்கும்இந்த படத்தில் மற்றவர்கள் கற்பனை செய்வது போல எந்தவிதமான ஆபாசமோ, அசிங்கமோ இல்லை எனது சகோதரியினை நான் அப்படி காட்டமாட்டேன் அப்படி காட்டப்படவேண்டி அவசியமும் எனக்கு இல்லை.படத்தை பார்க்காமல் தயவு செய்து யாருமே தவறான கருத்தை முன்வைக்காதீர்கள். இந்த திரைகாவியத்தினை முதன்மையானவர்களுக்கும், தமிழின உணர்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் தலைவர்களுக்கும் கண்டிப்பாக நான் போட்டுக்காட்டுவேன். அந்த தருணத்தில் நீங்கள் இதனை புரிந்து கொள்வீர்கள். இந்த படத்தில் ஏதாவது காட்சிகள் தவறாக இருந்தால் நீங்கள் என்வேண்டுமானாலும் செய்யலாம். படத்தினை தடைசெய்வதற்கும் வெளியிடாமல் தடுப்பதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு. இதனை நான் அனைத்து தமிழ் மக்களிடமும் பணிவன்புடன் வேண்டி நிக்கின்றேன்.இந்தபடம் இனப்படுகொலையின் சாட்சியாகத்தான் பேசும், என்று “போர்க்களத்தில் ஒரு பூ” திரைப்படத்தின் இயக்குனர் கு.கணேசன் தெரிவித்துள்ளார். நன்றி;சங்கதி24