இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அஹிடிசாரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் தயார் செய்துள்ளது.  

இதன்படி அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியல் ஒன்றை அரசாங்கம் விரைவில் வெளியிடப்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்குழுவின் ஆலோசகராக மார்டி அஹிடிசாரி நியமிக்கப்பட்டுள்ளமையை பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன. 

இந்த நிலையில் அவர் மேற்குலக நாடுகளின் விருப்பத்தின் படி செயற்படுகின்ற ஒருவர் என்று குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது.  

அத்துடன் அவர் சேர்பியாவில் இருந்து கொசோவாவை விடுவிப்பதற்கு, அல்பேனிய மாபியாவிடம் இருந்து 40 மில்லியன் டொலர்கள் கையூட்டல் பெற்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.