மகிந்தவிற்கு அரேபிய நாடுகள் எச்சரிக்கை! June 29, 2014 News அளுத்கம தர்கா நகர் பேருவளை தாக்குதல்கள் நடைபெற்றதை சுட்டிக் காட்டியும் கோட்டா அதன் பின்னணில் இருப்பதாலும் மகிந்தவை சந்தித்த அரபு நாடுகளின் தலைவர்கள் தம்பியை (கோட்டா) கவனிக்கவும் என்று எச்சரித்துள்ளார்கள். இதில் பங்களாதேஷ்,ஈராக்,ஈரான்,எகிப்து,இந்தோனேசியா, குவைத் மலேசியா, மாலைதீவு, பாகிஸ்த்தான்,பாலஸ்த்தீனம், துருக்கி,ஐக்கிய அரபு இராச்சியம்,சவுதிஅரேபியா,கட்டார், போன்ற நாடுகளின் வெளிநாட்டு தூதுவர்கள் மகிந்தவிடம் இந்த விளையாட்டை நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என மகிந்தவை எச்சரித்துள்ளனர்.இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரணை செய்ய ஐ.நா இலங்கைக்குள் வருவதை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக அரபு நாடுகள் வாக்களித்திருந்தன. அது மட்டுமல்ல இலங்கையில் நிறைய அபிவிருத்தி வேலைகள் செய்வதிலும் அரபு நாடுகள் கூடுதலான நிதி உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளன.இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கணிசமானோர் தொழில் புரிகின்றனர்.மகிந்த இந்த நாடுகளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியவில்லையாயின் ஒரு புறம் ஐ.நா விசாரணைக்கு அரபு நாடுகள் கூடிய ஆதரவை வழங்கலாம், நாட்டில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்,அரபு நாடுகளில் வேலை செய்யும் பல இலட்சக்கணக்கான இலங்கையர்கள் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படலாம். இதனால் இலங்கையில் வறுமை தாண்டவமாடும்.இவற்றை எல்லாம் சரிசெய்ய மகிந்தவிற்கு இப்போது இருப்பது ஒரே வழிதான் சாஸ்த்திரம் பார்ப்பதோ மாலைதீவு சியஸ் தீவுகளுக்கு ஓடுவதோ அல்ல, முதலில் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க வேண்டும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் அழிவுகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் நாட்டில் மீண்டும் வன்முறை வராமல் தடுக்க வேண்டும்.இவற்றை விட்டு விட்டு அவரின் வழமையான விளையாட்டை தொடர்ந்து காட்டுவாரானால் நிலைமை கடும் மோசமாக இருக்கும்.என்று தெரிவிக்கப்படுகின்றது.