தமிழர்களின் மீது தனது இனவழிப்பை மேற்கொண்ட மமதையில் இன்று இஸ்லாமிய மக்கள் மீது தனது அராஜகத்தைக் காட்ட பௌத்த சிங்கள இனவாதம் ஆரம்பித்துள்ளது. சிங்கள இனவாதம் தனது மறைமுக ஆயுதமாகப் பொதுபல சேனாவினை உபயோகிக்க ஆரம்பித்துள்ளார்கள். இதே முஸ்லிம்களை, இதே சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களிற்கு எதிரான ஆயுதமாகப் பாவித்தார்கள். தமது சுய இலாபங்களிற்காக முஸ்லிம்கள் தமிழர்கள் மீதான தாக்குதல்களையும் காட்டிக் கொடுப்புக்களையும் செய்து வந்தனர்.

தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டபோது சிங்கள அரசியற் தலைவர்களுடன் கைகோர்த்து நின்று இன்றுவரை தமிழினத்திற்கு எதிரான நிலைப்பாட்டினையே முஸ்லிம்கள் செய்த வந்தனர். இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டுப் பௌத்த விகாரைகள் கட்டப்படும் போதும், தமிழர் நிலங்கள் எங்கும் சிங்களக் குடியேற்றங்கள் ஆக்கிரமித்தபோதும் மறந்தும் வாய்திறக்க முஸ்லிம்கள் மறக்கவில்லை.

இனப்படுகொலையாளர்கள் என்பவர்கள் விசர்நாய் போன்றவர்கள். தம்மோடு சேர்ந்த நின்று உணவு போட்டவர்களைக் கூட அது ஒரு நாள் திருப்பிக் கடிக்காமல் விடாது. இன்று இதே நிலை முஸ்லிம்களிற்கு நேரத் தொடங்கி உள்ளது. பள்ளிவாசல்கள் அடித்து நொறுக்கப்படுவதும் முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் இன்று சிறீலங்காவின் அன்றாட நிகழ்ச்சி நிரல் ஆகி விட்டது. முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் பல பௌத்த பிக்ககளாலும் பொதுபல சேனா போன்ற பிக்கு உடையிலிருக்கும் காடையர்களாலும் அடித்து நொறுக்கப்பட்டும், எரியூட்டப்பட்டும் வருகின்றது. தங்கள் வினை தங்களையே சுடுவதை இப்பொழுது தான் முஸ்லிம்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

‘தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று ஒரு புதிய நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதுவரை நாளும் சிங்களப் பேரினவாதத்தால் நசுக்கப்பட்டு வந்த தமிழர்கள் இன்று முஸ்லிம் காடையர்களின் கொலைவெறிக்குள்ளும் அகப்பட்டுச் சொல்லொணாத் துயரங்களை அடைந்து வருகின்றனர். சிங்கள ஆக்கிரமிப்புக்கெதிராகத் தமிழர்களுடன் சேர்ந்து போராடவேண்டிய தமிழீழ முஸ்லிம்கள் எந்தவிதமான தீர்க்கதரிசனப் பார்வையும் இல்லாது சிங்களப் பேரினவாதத்திற்கு உட்பட்டுத் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கள இனவாதப் பூதத்தைத் திருப்திப்படுத்தி அற்ப சலுகைகைகளைப் பெறுவதற்காக அயலவர்களான தமிழர்களைக் கொன்றொழித்த முஸ்லிம்கள் நாளை அதே சிங்களப் பூதத்தால் விழுங்கப்படப் போகின்றார்கள்’. இது விடுதலைப் புலிகள் இதழில் 1990ம் ஆண்டு வெளியாகிய கட்டுரையன்றின் பகுதி. தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம் அழிக்கப்பட்டால் நாளை முஸ்லீம்களும் அழிக்கப்படுவார்கள் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் தொலைநோக்குப் பார்வையுடன் கண்ட தீர்க்க தரிசனம் இது.

இது இன்று கண்கூடான நிஜமாக முஸ்லிம்களைத் தாக்க ஆரம்பித்துள்ளது. பள்ளிவாசல்கள் புதுப்பிக்கப்பட்டாலோ அல்லது புதிதாக நிரமாணிக்கப்பட்டாலோ சிங்கள பௌத்தர்கள் சும்மா பார்த்துக் கொண்டு இருக்கப்போவதில்லை என்ற எச்சரிக்கை இன்று முஸ்லிம்களின் காதுகள் எங்கும் எதிரொலித்துக் கொண்டு இருக்கின்றது. சிங்களப் பேரினவாதம் தமிழர்களின் மீது தமது இனப்படுகொலை ஆயுதத்தை ஏவியபோது இதே முஸ்லிம் தலைவர்கள் அரபு நாடுகளிற்குப் பறந்து சென்று சிறீலங்கா அரசின் இனப்படுகொலை ஆயுதத்தை வலுப்படுத்தினார்கள். பாகிஸ்தான் ஆயுதங்களைக் குவிக்க இவர்கள் கருவிகளாக இருந்தார்கள்.

இன்று தம் மக்கள் மீதே அந்த ஆயுதங்கள் திரும்பும் போது ‘முஸ்லிம்கள் மீது கைவைத்தால் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைச் சிங்களம் இழக்க நேரிடும்’ என எச்சரிக்க ஆரம்பித்துள்ளார்கள். முஸ்லிம் நாடுகளின் விமானங்கள் சிறீலங்காவில் தரையிறங்காது என்று எச்சரித்துள்ளார்கள். அரபு நாடுகளில் பணிபுரிந்து நாடு திரும்ப எத்தனிப்பவர்களும் அல்லது அரபு நாடுகளிற்கு வேலை செய்யப் பயணிக்க உள்ளவர்களும் சிறீலங்கா விமான சேவையைப் பயன்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். எமது மக்கள் இவ்வளவு இனப்படுகொலைக்கப் பின்னரும் சுற்றுலா செல்ல சிறீலங்கன் விமான சேவைதான் நல்லது என்றும், கொண்டாட்டங்களில் நெக்டோ குளிர்பானத்தைக் குடிக்காவிட்டால் தின்றது செரிக்காது என்றும் திரியும் நிலையில், தம்மீதான தாக்குதல் ஆரம்பித்த உடனேயே முஸ்லிம்கள் சிறீலங்காவைப் புறக்கணிக்க எத்தனிப்பது வரவேற்பிற்குரிய விடயம். தமிழர்கள் கவனத்தில் எடுக்கவேண்டிய விடயம்.

சிங்களத்துடன் ஒட்டுண்ணியாக இருந்த பதியுதீன் போன்றோரை மகிந்த இராஜபக்ச இனவாதியென குற்றம் சாட்டி உள்ளார். ஒட்டுண்ணி அரசியல் நடாத்தும் இவர்கள் போன்றவர்கள் தமது இனத்திற்காகாக் கூட வாய்திறக்கும் அருகதை அற்றவர்கள் என்பதை இராஜபக்ச அரசு முஸ்லிம் அரசியல்வாதிகளிற்குத் தெளிவு படுத்தியுள்ளது.

ஆனாலும் இன்னமும் ஏ.எல்.எம் அதவுல்லா போன்ற முஸ்லிம் அமைச்சர்கள் இன்னமும் தமது இனத்தைக் காட்டிக்கொடுத்து முஸ்லிம்கள் மீதான தாக்குதலிற்குச் சர்வதேச சமூகமே காரணம் எனவும் கூறி மகிந்தவையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தையும் காப்பாற்ற முனைந்து கொண்டுதான் உள்ளார்கள். இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கும் வரை முஸ்லிம்களிற்குச் சிங்களவர்களால் மட்டுமல்ல முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் அழிவு ஏற்பட்ட வண்ணம்தான் இருக்கும்.

இன்று சிங்களத்தின் தாக்குதலிற்கு எதிராகக் குரல்கொடுக்க முனையும் முஸ்லிம் இளைஞர்களை ஜிகாதிகள் என்ற பெயரில் சிங்கள பௌத்த அரசு பயங்கரவாத முத்திரை குத்தி அழிக்க எத்தனித்துள்ளது. தமிழீழ மக்கள் தமது நிலத்தில் தமக்கிருக்கும் உரிமையைப் பெற்றெடுக்க தர்ம வழியில் நடாத்திய போராட்டத்தைப் பயங்கரவாத முத்திரை குத்திச் சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்ய முயன்ற வேளை இதே முஸ்லிம் அமைச்சர்கள் தமிழர்களுக்கெதிரான பிரச்சாரத்தில் மும்மரமாக ஈடுபட்டவர்கள். இன்று அவர்களை நோக்கியே சிங்கள பௌத்த அரசு பயங்கரவாத முத்திரையை நீட்ட எத்தனிக்கின்றது.

நடாத்தப்பட இருக்கும் ஒரு முஸ்லிம் படுகொலையை, மீண்டும் சர்வதேசத்திற்குப் பயங்கரவாதத்திற்கான மனிதாபிமானப் போராகக் காட்ட எடுக்கும் ஒரு முயற்சியாகும். இனியவாது இந்த ஒட்டுண்ணி அரசியல்வாதிகள் விழித்தெழுவார்களா என்பது சந்தேகத்திற்குரியதே!

முஸ்லிமகள் தங்களிற்கும் தமிழர்களிற்கும் பொதுவான எதிரி சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பாளர்கள் தான் என்பதைக் காலம் கடந்துதான் உணர ஆரம்பித்துள்ளார்கள். என்றுமே இன்னொரு இனத்திற்கு ஏவலாளிகாள் இல்லாது தம்மை நிரூபிக்க வேண்டிய காலகட்டம் முஸ்லிம்களிற்கு வந்துள்ளது.

சிங்களவர்களால் தாக்கப்படும் முஸ்லிம் தாய்மார்கள் ‘தேசியத்தலைவர் பிரபாகரன் எங்கே? அவர் வந்தால் மட்டுமே எங்களைக் காப்பாற்ற முடியும்’ என்று கதற ஆரம்பித்துள்ளார்கள். தமிழர்களிற்கு மட்டுமல்லாது முஸ்லிம்களிற்கும் விடுதலைப் புலிகள் மட்டும் தான் கவசமாக இருக்க முடியும் என்பதை இப்பொழுதென்றாலும் உணர ஆரம்பித்துள்ளது நல்லதொரு அறிகுறியே.

ஆசிரியர் தலையங்கம்

நன்றி: ஈழமுரசு