மண்ணின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் -சிறிதரன்! June 29, 2014 News வல்வெட்டித்துறை ஒரு வரலாற்று மண். வரலாறுகளைத் தந்த மண். இங்கு பிறந்த ஒவ்வொருவரும் அந்த உணர்வுத் தொடர்ச்சியுடன் வாழ வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். எமது மகிழ்ச்சிக்காக, எமது விடியலுக்காக நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இளம் கனவுகளையும் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களையும் மண்ணுள் விதைத்து விட்டு அந்த சமாதிகளின் மேல் இருந்துதான் நாம் இன்று ஒவ்வொரு செயற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார். வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் அமரர் திருமதி கெங்காதேவி பாலச்சந்திரன் நிiiவாக பெண்களுக்கான மென்பந்து மற்றும் கலைப்பந்தாட்ட போட்டிகளை அண்மையில் நடாத்தியது. இந்தப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் மேற்கண்ண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,வல்வெட்டித்துறை ஒரு வரலாற்றுப் பூமி. வரலாறுகளை தந்த ஊரில் பிறந்த நீங்களும் அதன் உணர்வுத்தொடர்ச்சியானவர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எமது மகிழ்வுக்காக விடியலுக்காக நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இளம் கனவுகளையும் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களையும் மண்ணுள் விதைத்து விட்டு அந்த சமாதிகளின் மேல் இருந்துதான் நாம் பேசுகின்றோம் விளையாடுகின்றோம். இன்றைக்கு இந்த மண்ணில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் அரங்கேற்றிய கொடுமைகளுக்கு பிரதிபலனாக சர்வதேசம் விசாரணையை கொண்டு வந்திருக்கின்றது. இன்றி அதில் இருந்து தப்பித்துக்கொள்ள இலங்கை அரசாங்கம் செய்கின்ற பிரயத்தனங்களை பார்க்கின்றீர்கள். இது அவர்களுக்கு சுருக்கு கயிறாகவே மாறும். அண்மையில் முஸ்லிம் சகோதரர்கள் மீது மிககொடுரமான மானுட குலத்துக்கு எதிராக மானுடத்து எதிராக இலங்கை அரசாங்கத்தின் அனுசணையுடன் இனவாத சக்திகள் அரங்கேற்றியவை வெட்கத்துக்கு உரியவையாக உலகத்தால் பார்க்கப்படுகின்றது. எனவே ஒரு சர்வாதிகார அரசு எப்படி இருக்குமோ இன்று அதை இலங்கை அரசாங்கம் நிரூபித்துக்கொண்டிருக்கின்றது. இந்த மண்ணில் மக்களை எந்த அடிமைகளாக வைத்திருக்க முடியுமோ அந்த அளவுக்கு முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.யாழ்ப்பாண மண்ணில் இன்று வாள்வெண்டுக்களும் குழு மோதல்களும் கொலைகளும் தற்கொலைகளும் மலிந்திருக்கின்றது. இவை முன்பு இருந்ததில்லை. இவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு எமது மண் சீரழிவதற்கு வழி செய்யப்படுகின்றது. இதில் நாம் விலகியிருக்க வேண்டும். தீய சக்திகளில் இருந்தும் போதை பொருள் பாவனையில் இருந்தும் நாம் விலகியிருக்கவேண்டும். ஆகவேஇத்தகைய சூழலில் இளைய சமுதாயத்தில் இத்தகைய மதிக்கத்தக்க விளையாட்டுக்கழகங்களின் செயற்பாடுகளை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது.உங்கள் சமுக நல்லெண்ண முயற்சிகள் தொடரட்டும். நாமும் அதற்கு துணை இருப்போம் என தெரிவித்தார். கழுகுகள் விளையாட்டுக்கழக தலைவர் சதீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் இதில் பிரதம விருந்தினராக பா.உறுப்பினர் சி.சிறீதரன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், சுகிர்தன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக யாழ் கம்பர் மலை வித்தியாலய அதிபர் ரவீந்திரன் உடுப்பிட்டிவடக்கு கிராம உத்தியோகத்தர் குமாரு சந்திpரமோகன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த போட்டிகளில் பங்குபற்றிய விளையாட்டு வீரர்களை மதிப்பளித்தும் வெற்றிக்கிண்ணங்களை வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.