நெதர்லாண்ட் நாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய செயற்பாட்டாளர்  தனது வழக்கை, தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என அடையாளப்படுத்தி  தொடர்ந்து வருகையில்  இவ்  வழக்கு விடையமான முக்கியமான விசாரணை எதிர்வரும் 4.07.2014 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற இருப்பதால் பெருமளவான தமிழ் மக்கள் அன்றைய தினத்தில் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு விடுதலை மக்கள் அமைப்பு என ஆதரவு தெரிவிக்க அழைக்கப்படுகின்றனர் .

இத்தாலி நாட்டிலும் கைது செய்யப்பட்ட  செயற்பாட்டாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு விடுதலை அமைப்பு என தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது .

இத்தருணத்தில் தமிழினத்தைக் காத்த விடுதலை அமைப்புக்கு அங்கீகாரம் வேண்டியும் தமிழீழ மக்களை இன அழிப்பில் இருந்து  பாதுகாக்கவும்  நெதர்லாந்தில் வாழும் அடுத்த தமிழ்த் தலைமுறையினரின் கல்வி;, கலாசாரம் பாதுகாக்கப்படவும்  நெதர்லாந்து நாட்டில் இருந்தும் மற்றும் ஏனைய அண்டைய நாடுகளில் இருந்தும்  தமிழ்மக்களாகிய அனைவரும்  விசாரணை நடைபெறுகின்ற நீதிமன்ற வளாகத்தில் ஒன்றுகூடி தமிழீழ மக்களுக்காக நீதி கேட்போம். 

எதிர்வரும் 04.07.2014 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு Prins clausplein 60, 2595 AJ, Den Haag   அனைவரும் அணிதிரள்வோம் .