ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் தாம் அரசியலுக்கு வருவேன் – அரசியல் சால்வை போட விளையும் கோத்தபாய ராஜபக்ச July 2, 2014 News பொதுபலசேனாவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் தான் பதவி விலகத் தயார் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முஸ்லிம் அமைப்புக்கள் உட்பட்ட பல்வேறு தரப்புக்கள் இந்தக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. இவையாவும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் தாம் அரசியலுக்கு வருவேன். அரசியலில் இறங்கிவிட்டால் தற்போதைய அரசியல்வாதிகளை விடவும் சிறந்த சேவையை என்னால் ஆற்றமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். Kilde: Dailymirror