புகலிடம் தேடி வந்த 153 இலங்கையரையும் கடற்படையிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலியா அரசு முயற்சி July 2, 2014 News இலங்கை யர்கள் 153 பேருடன் ஆஸ்திரேலியாவுக்கு அண்மையில் கிறிஸ்மஸ் தீவுகளை ஒட்டி வழிமறிக்கப்பட்டதாகக் கூறப்படும் படகையும் அதில் இருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களையும் ஆஸ்திரேலியா இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கப் போகின்றது என்ற செய்தி மிகவும் பரபரப்பை ஏற்படுத்துகின்றது ஆஸ்திரேலியாவை நோக்கி புகலிடம் பெறுவதற்காக வந்துகொண்டிருந்த அவர்களை புகலிடத்துக்கான கோரிக்கையைக் கூட சமர்ப்பிக்கவிடாது வழிமறித்து இலங்கையிடமே திருப்பி ஒப்படைப்பது என்பது அகதிகள் தொடர்பான சர்வதேச சட்டங்களையும் உடன்பாடுகளையும் அப்பட்டமாக மீறும் செயல் என்று ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்ஸில் ஆஸ்திரேலிய அரசை வெளிப்படையாக எச்சரித்திருக்கின்றது. இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலிய கடற்படை சத்தம் சந்தடியின்றி இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப் போகின்ற தகவல் வெளியானமையை அடுத்து மனித உரிமைகள் அமைப்புகளும், புகலிடக் கோரிக்கையை நலனோம்பும் சர்வதேச கட்டமைப்புகளும் ஆஸ்திரேலியாவின் செயல் குறித்துக் கொதித்துப் போய் இருக்கின்றன என்று கூறப்படுகின்றது. http://media.smh.com.au/news/federal-politics/asylum-seekers-why-the-secrecy-5559671.html