முடியுமானால் பொது பல சேனாவை விமர்சித்துப் பாருங்கள். இத்தாலியில் விமல் வீரவன்ச விற்கு நடந்தது தான் உங்களுக்கும் நடக்கும் – தெனிய நந்த தேரோ July 2, 2014 News பொது பலசேனாவை கடுமையாக விமர்சித்துப் பேசிய அமைச்சர் விமல் வீரவன்ச மீது அவ் அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்குல் நடத்தியுள்ளனர். இத்தாலி வாழ் சிங்கள மக்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக இத்தாலி சென்றுள்ள விமல் வீரவன்ச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு நிகழ்த்திய உரையில் புத்த துறவிகளின் அமைப்பான பொது பலசேனாவைப் பற்றி மிகக் கடுமையாக விமர்ச்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியின் ஆதரவாளர்கள், இவரின் பேச்சை எதிர்க்கும் வகையில் அவரது சட்டையை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த தகவலை உறுதி செய்த பொது பலசேனாவின் தேசிய அமைப்பாளரான வித்திர தெனிய நந்த தேரோ, தாக்குதல் நடத்தியவர்கள் பொதுபல சேனாவைப் பற்றி இங்கு பேசக் கூடாது என அமைச்சரிடம் தெரிவித்தாகவும், அப்போது, அமைச்சரின் பாதுகாவலர்கள் விமல் வீரவன்சவை பாதுகாத்ததாகவும் தெரிவித்துள்ளார். . மேலும் பொதுபல சேனா மீது எவரேனும் கை வைத்தால் முழுநாடும் கொந்தளிக்கும் எனவும் தேரோ மிரட்டல் விட்டுள்ளார் Kilde: Tamilleder