புகலிடம் கோரி அவுஸ்ரேலியாவுக்கு படகில் வந்த காரணத்தினால் அவர்களை நடுக் கடலில் வைத்து பெரிய அதிவேக படகுகள் மூலம் ஸ்ரீலங்காவிற்கு திருப்பி அனுப்பியதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பட்டம் ஒன்றினை அகதிகளுக்காக செயற்ப்படும் அமைப்பான Refugee Action Coalition Sydney ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த Ian Rintoul ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கான சமவுரிமை மற்றும் அவர்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இதுவரைக்கும் வழங்கப்படவில்லை. தற்ப்போதும் கடத்தல்கள் புலனாய்வு விசாரணைகள் என தமிழர்களுக்கு சரியான முறையில் ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு இல்லை அதனால் தங்களது உயிரை பாதுகாக்கவே நாடு நாடாக இடம்பெயர்கின்றனர் .

அது மற்றும் இன்றி ஸ்ரீலங்காவில் வாழ்வதற்க்கான உரிமை மறுக்கபட்டதால் தான் அவர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக சென்று இருந்தார்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்களை மீண்டும் இன படுகொலை யளியான மகிந்தவிடம் ஒப்படைப்பது மாபெரும் தவறு என தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டமானது எதிர்வரும் 7 ம் திகதி சிட்னியில் உள்ள குடிவரவு அலுவலகத்துக்கு முன்னால் சரியாக 12 மணியளவில் இடம்பெறவுள்ளதென Ian Rintoul தெரிவித்தார்.

racs

இதேவேளை, கிறின் கட்சியின் செனட் சபை உறுப்பினர் சேரா கான்சம்சங் என்பவர் அவுஸ்திரேலியா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், புகலிடம் கோரி இலங்கையிலிருந்து வந்த சிறுவர்களையும் பெண்களையும் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவது மனிதாபிமானமற்ற அதேவேளை மனித உரிமையை மீறும் செயல் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்றே தென்துருவ தமிழ்ச்சங்கங்களின் சம்மேளத்தின் தலைவர் விக்ரா ராஜகுலேந்திரனும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்திருப்பதாகத் தெரிகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆவணத்தின்படி ஒரு நாட்டிலிருந்து அகதி அந்தஸ்து கோரிவருவோரை அந்நாட்டிடமே திருப்பி அனுப்புவது மனிதாபிமானமற்ற செயலென அந்த மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

அவுஸ்ரேலியா மனித உரிமை அமைப்பினால் ஐநா மனிதஉரிமை ஆணையாளரிட்கு அனுப்பப் பட்ட கடிதம் இது – இங்கே அழுத்தவும்

Kilde: Refugee Action Coalition Sydney & Human Rights Law Centre