சிறுவயதில் இருந்து தாயகத்தை காதலித்து வந்த கம்சாயினி அவர்கள் தாயகப்பாடலை பாடுவதிலும் தாயகப்பாடலுக்கு நடனம் ஆடுவதிலும் தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அத்தோடு அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தில் தமிழ்மொழியை கற்றுவந்த இவர் தாயகம் சமூகம் சார்ந்த கவிதைகளையும் எழுதிவந்தார் இத்தோடு தமிழ் இளையோர் அமைப்பிலும் உறுப்பினராக இருந்து தமிழ் இனத்திற்காக பணியாற்றி வந்தார்.

2006 ஆம் ஆண்டு ஒஸ்லோ மாநகரத்தேர்தலுக்காக தொழிவாளர் கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டு 2007 ஆம் ஆண்டு நேர்ர்வே தமிழர் ஒருங்கிணைப்புப்குழுவின் ஆதரவோடு ஒஸ்லோ தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு 2200 வாக்குகளோடு நாற்பத்தி நான்காம் இடத்திலிருந்து பன்னிரண்டாவது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு நோர்வே அரசியலில் கால்பதித்த முதற் தமிழ்ப்பெண்மணியாக நோர்வே தமிழர் வரலாற்றில் பதிவாகினார்.

இன்று தொழிலாளர் கட்சியில்; ஒஸ்லோவின் உபதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் இந்த தெரிவானது தமிழர்களுக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என்றால் அது மிகையாகாது.