கரும்புலிகள் எமது போராட்டத்திலே ஒரு வரலாற்றுத்தேவையாகத் தோற்றம் பெற்றவர்கள் தேவையின் நிர்ப்பந்தத்தால் பிறந்தவர்கள் இவர்கள் உண்மையிலேயே சாதாரண மனிதப்பிறவிகள் அல்லர் இவர்கள் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் குறியீடு செய்கின்றரர்கள் இதன் அர்த்தபரிமாணம் அளவுகடந்த ஆற்றலையும் சக்தியையும் குறித்து நிற்கிறது.

20140705_204946
பொதுவாக மரணத்திற்கு அஞ்சுவதுதான் மனித இயல்பு. இதுதான் இயற்கையின் நியதியும் கூட. இந்த இயற்கையின் நியதியாக மனிதன் பிறந்த கணத்திலிருந்தே மரணமும் அவனோடு சேர்ந்து பிறப்பெடுக்கின்றது. அவன் இந்த மரணத்தைத் தனது வாழ்நாளின் ஒவ்வொரு கணத்திலும் எதிர்கொண்டு வாழ்கிறான். அவானல் இந்த மரணத்தை பட்டறிந்துகொள்ள முடிவதில்லை. இது மட்டும் அவனது அனுபவத்திற்கு அப்பாலானது. ஆனால் கரும்புலிகள் முற்றிலும் வித்தியாசமானவர்கள். இவர்கள் தமது மரணத்தை முன்னரே பட்டறிந்துகொள்கின்றார்கள்.

அத்தோடு தமது இலட்சியம் நிறைவடையப்போகின்ற அந்த நாளுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். என்ற தமிழீழத்தேசியத்தலைவரின் கருத்துக்கமைய இனத்துக்காக மனிதவாழ்வு உயிர் எல்லாவற்றையும் ஈகம் செய்த புனிதர்களின் நினைவுநாள் இன்று.

இந்நாளின் புனிதத்தை அசைக்கமுடியாத நம்பிக்கையை தமிழர்களாகிய நாம் எப்போதும் மறக்கமுடியாது.கரும்மனிதர்களாக நெருப்பில் நீராடியா தீரர்களின் தியாகங்களை அந்த அற்புதமனிதர்கள் எம்மோடு பேசிவிட்டுப் போன உறுதியை உள்ளத்தில் இருந்து எப்போதும் அகற்றமுடியாது.

20140705_204615தேசவிடியலுக்காய் தரை கடல் வான் என எல்லா களங்களிலும் நின்று தேசத்தின் சிரிப்பிற்காய் வெடித்தமனிதர்களின் நாளில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் சத்தியம் செய்துகொள்கின்றது. அம்மாவீரர்களின் கனவை நனவாக்கிக்கொள்வதர்க்காய்.