இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் விஷேட தூதுவர் சிறில் ரமபோச நாளை திங்கட்கிழமை கொழும்பு வருகிறார். இனநெருக்கடிக்கு சமாதானத் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு உதவுவதுதான் அவரது விஜயத்தின் பிரதான நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தரப்பு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் அவர் பேச்சுக்களை நடத்தவிருக்கின்றார்.

இருந்தபோதிலும், அவரது விஜயம் கொழும்பில் அவர் நடத்தப்போகும் பேச்சுவார்த்தைகள் என்பன எந்தளவுக்கு பயனுள்ளதாக அமையும் என்ற கேள்வி இன்று அனைத்துத் தரப்பினரிடமும் எழுப்பப்பட்டிருக்கின்றது. சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் அழுத்தங்களைக் கையாள்வதற்கான ஒரு உபாயமாகத்தான் தென்னாபிரிக்காவை அரசாங்கம் பயன்படுத்த முற்பட்டுள்ளதா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றது.

இலங்கை இனப் பிரச்சினைக்கான சமாதான முயற்சிகளில் வெளிநாடு ஒன்று சம்பந்தப்படுவது என்பது இதுதான் முதல்முறையல்ல. 1980 களில் இந்திய சமாதான முயற்சிகளில் இறங்கி தன்னுடைய கைகளைச் சுட்டுக்கொண்டது. பிரச்சினையில் மத்தியஸ்தராகத் தலையிட்ட இந்தியாவை யுத்தத்தின் ஒரு தரப்பாக மாற்றுவதில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன வெற்றிபெற்றார்.

2002 இற்குப் பிற்பட்ட காலத்தில் சமாதான முயற்சிகளில் இறங்கிய நோர்வே அதில் தோல்வியடைந்தது. இப்போது தென்னாபிரிக்கா சமாதான முயற்சியில் இறங்கியிருக்கின்றது. முன்னைய முயற்சிகளுக்கும் தற்போதைய தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த முயற்சிகளுக்கும் இடையில் முக்கிய வித்தியாசம் ஒன்றுள்ளது.

இந்தியா, நோர்வே என்பன சமாதான முயற்சியில் இறங்கிய போது, ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்து பலமான நிலையில் இருந்த விடுதலைப் புலிகள் ஒரு தரப்பாக இருந்தார்கள். இப்போது அந்த இடத்தில் தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஒரு வருடமாக இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவடைந்த நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என அரசாங்கம் திடீரென எடுத்துக்கொண்ட நிலைப்பாடே இதற்குக் காரணம்.
இரு தரப்புப் பேச்சுக்களில் முதலில் இணக்கம் ஏற்பட வேண்டும். அந்த இணக்கத்தின் அடிப்படையிலேயே தெரிவுக்குழுவில் பேச்சுக்களை நடத்த முடியும் என்பதுதான் கூட்டமைப்பின் நிலைப்பாடு. ஆனால், ஒரு வருடகாலமாக கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்திய அரசாங்கம், அதனைத் தொடர்வதற்கு விருப்பமற்ற ஒரு நிலையில்தான் தெரிவுக்குழு என்ற தடைக்கல்லைக் கொண்டுவந்து போட்டிருக்கின்றது. இந்த முட்டுக்கட்டை நிலையை முடிவுக்குக் கொண்டுவர தென்னாபிரிக்காவினால் முடியுமா?

இலங்கைப் பிரச்சினையில் தென்னாபிரிக்கா திடீரெனத் தலையிடவில்லை. போர்க் குற்றங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்த போது, அதனைச் சற்று தளர்த்துவதற்கான உபாயமாகத்தான் தென்னாபிரிக்காவைக் கையாள கொழும்பு முற்பட்டது. தென்னாபிரிக்காவில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்ட அனுபவங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்ற அடிப்படையில்தான் இது ஆரம்பமாகியது.

ஆனால், இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கான விஷேட தூதுவர் ஒருவரை நியமிக்குமாறு இலங்கை அரசாங்கம்தான் தென்னாபிரிக்காவைக் கேட்டிருந்தது. தென்னாபிரிக்காவின் பிரதி ஜனாதிபதியான சிறில் ரமபோச இதற்காக நியமிக்கப்பட்டிருந்தார். இருந்தபோதிலும்,அரசின் பங்காளிக் கட்சிகள் உட்பட சிங்களத் தேசியவாத அமைப்புக்கள் பலவும் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தன என்பது அரசாங்கத்துக்கு சங்கடமான ஒரு நிலையைக் கொடுத்திருந்தது.

ரமபோசவின் வருகை தொடர்பில் அரசாங்கம் அக்கறை காட்டாமலிருந்தமைக்கு அதுதான் பிரதான காரணம். ஆனால், இப்போது போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா.விசாரணை ஆரம்பமாகப் போகின்றது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு மிகவும் பலமானதாக உள்ளது. இலங்கைக்கு கடுமையான நெருக்கடியைக் கொடுப்பதாக இந்த விசாரணைகள் அமையும் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இந்த நியமனங்கள் உள்ளன.

இந்த நிலையிலேயே, ரமபோசவின் வருகைக்கு இப்போது பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது. சர்வதேச நெருக்கடிகள் அதிகரிக்கும்போது சமாதான முயற்சிகளுக்கு சாதகமாக சமிக்ஞை காட்டுவதும், உள்நாட்டு அழுத்தங்கள் அதிகரிக்கும் போது அவற்றைக் கைவிட்டுவிடுவதும் இலங்கைக்கு கைவந்த கலை. இதுதான் இலங்கையின் இராஜதந்திரம்.

தென்னாபிரிக்க தூதுக்குழு வரவிருக்கும் நிலையில் அமைச்சர் களிடமிருந்து வெளிவரும் பிரதிபலிப்புக்கள் இலங்கை அரசாங்கத்தின் நோக்கங்கள் குறித்து சந்தேகங்களையே எழுப்புகின்றன. ரமபோசவின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது தமக்குத் தெரியாது என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார். தென்னாபிரிக்கா என்னதான் பேச்சுக்களை நடத்தினாலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் வந்தால்தான் பேச்சுக்களைத் தொடரமுடியும் என மற்றொரு அமைச்சர் சொல்லியிருக்கின்றார்.
சர்வதேச நெருக்கடியைச் சமாளிக்க தென்னாபிரிக்கா அழைக்கப்பட்டாலும், உள்நாட்டு நெருக்கடிகளைச் சமாளிக்க மற்றொரு வியூகத்துடன் அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்பதை இந்தச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. கடுமையான சர்வதேச நெருக்கடி ஒன்றை அரசாங்கம் எதிர்கொண்டிருக்கின்றது என்பது உண்மைதான்.

இதனை எவ்வாறு சமாளிப்பது எனத் தெரியாமல் அரசாங்கம் திண்டாடுகின்றது. போர்க் குற்றங்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உறுதியளித்தபடி நம்பகத்தன்மையான விசாரணை ஒன்றை அரசாங்கம் வெளிப்படையாக நடத்தியிருந்தால் பெருமளவு நெருக்கடிகளைத் தவிர்த்திருக்க முடியும்.

அதேபோல, அரசியல் தீர்வு தொடர்பிலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது. அதிகாரப்பரவலாக்கல் மூலம் நியாயமான ஒரு தீர்வை அரசாங்கம் வழங்கியிருந்தால் வெளிநாடுகள் தலையிடும் நிலை ஏற்பட்டிருக்காது. இப்போது உருவாகியிருக்கும் நெருக்கடிகள் அனைத்துக்கும் அரசாங்கமே காரணமாக இருந்துள்ளது.

தென்னாபிரிக்கா அழைக்கப்பட்டதில் கூட மறைமுகமான ஒரு நிகழ்ச்சித் திட்டமே அரசாங்கத்துக்கு இருந்துள்ளது. அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் அதற்கு ஆதாரம். இந்த நிலையில் ரமபோசவின் வருகையில் நம்பிக்கை வைக்க என்ன இருக்கிறது

1111_cyril-ramaphosa_650x455

Special Envoy to Sri Lanka and Deputy President of the African National Congress (ANC), Cyril Ramaphosa visiting Sri Lanka, tomorrow (07.07.14)

South Africa’s Special Envoy to Sri Lanka, and Deputy President of the African National Congress (ANC), Cyril Ramaphosa will pay a visit to Sri Lanka tomorrow (July 07) with a delegation of 7 diplomats.

[IMG]/images/image_gallery/cartoon/2014/7_jul/Ramspa_410px_06-07-14.jpg[/IMG]Ramaphosa is scheduled to arrive in Sri Lanka to hold talks with the government, the opposition and other civil society groups in an effort to work out a lasting solution to the ethnic issue.

South African President Jacob Zuma’s representative, Ebrahim Ebrahim, Deputy Minister for Traditional Affairs Obed Bapela, former Defence Minister Rolf Meyer and NGO activist Ivar Jenkins are included in the delegation.

Jathika Hela Urumaya (JHU) and National Freedom Front (NFF) have completely objected this South African intervention.

When inquired on this regard, the Media Spokesman of NFF Mohammed Muzammil stated that the 4th point in their manifesto which received government’s approval is that inviting the South Africa’s Special Envoy Cyril Ramaphosa to Sri Lanka cannot be agreed upon. He further stated that they completely object this particular action and his party’s stand on this regard will be expressed at the media briefing today (July 06).

Kilde: Thinakkural / srilankamirror.com