நெதர்லாந்தில் தேசியச் செயற்பாட்டாளர்களிற்கு எதிரான வழக்கானது “டென் காக்” (Den Haug) உயர்நீதிமன்றத்தில் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகின்றது. அரச மற்றும் சட்டவாளர்களின் இறுதி வாதாட்டம் கடந்த யூலை 3ம், 4ம் திகதிகளில் நடைபெறும் என்றும், குற்றஞ்சாட்டப்பட்ட செயற்பாட்டாளர்களின் இறுதி வாக்குமூலம் பிற்போடப்படுவதாகவும், கடந்த 1 யூலை அன்று, உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதன்படியே, செயற்பாட்டாளர்களிற்கான சட்டவாளர்களின் வாதாட்டம் கடந்த 4ம் திகதி நடைபெற்றது. இவ்வழக்கின் விசாரணைகள், வாதாட்டங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், சிறையில் இறுதியாகவுள்ள ஒருவரின் தற்காலிக விடுதலைபற்றி வாதாடுவதற்கு அவரின் சட்டவாளருக்கு நீதிபதி தானாக முன்வந்து சந்தர்ப்பம் அளித்திருந்தார். அதன்படியே, அத்தற்காலிக விடுதலைபற்றி அவரின் சட்டவாளர் வாதாடியிருந்தார். இதன்பின், அவரின் விடுதலைபற்றிய முடிவுமட்டும் எடுப்பதற்காகவே எதிர்வரும் 18ம் திகதி நீதிமன்ற அமர்வு நடைபெறவிருக்கின்றது. குற்றஞ்சாட்டப்பட்ட செயற்பாட்டாளர்களின் இறுதி வாக்குமூலமும் இவ்வழக்கின் உயர்நீதிமன்றத் தீர்ப்பும் எதிர்வரும் செப்ரம்பர், ஒக்ரோபர் மாதங்களிற்கு இவ்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா? இல்லையா? என்ற ஐரோப்பிய நீதிமன்றத்தின் (லக்சம்பேர்க்) தீர்ப்பு வரும்வரைக்கும் இவ்வழக்கின் தீர்ப்பை தள்ளிவைக்குமாறு, அனைத்து சட்டவாளர்களும் தங்கள் வாதாட்டங்களின் போது தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருந்தனர். ஆனால், ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பானது எப்போது வரும் என்ற நீதிபதிகளின் கேள்விக்கு யாரிடமும் தெளிவான பதில் இருக்கவில்லை என்பதால், இதுபற்றி இந்த நெதர்லாந்து உயர்நீதிமன்றமே விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா? இல்லையா? என்பதுபற்றி முடிவெடுக்கும் நிலையும் காணப்படுகின்றது.

demons-1

மேலும், இந்த உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் தாங்களாக முன்வந்து, விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப்பட்டியலில் இட்டது சரியா என்று, நெதர்லாந்து சட்டசபைக்கு கடந்தவருட இறுதியில் கேள்வியைக் கேட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்தது. இதற்கு தாங்களாக முடிவெடுக்க முடியாத சிக்கலான நிலையில், இச்சட்டசபையானது ஐரோப்பிய நீதிமன்றத்திடம் கடந்த 2 ஏப்ரல் அன்று இக்கேள்வியைக் கேட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்தது. இதுபற்றி நெதர்லாந்து மொழியில் வந்த செய்தியை பார்வையிட இங்கே அழுத்தவும்

http://www.nieuws.nl/algemeen/20140402/Raad-van-State-twijfelt-over-terreurstatus-Tamils

எனவே, ஐரோப்பிய நீதிமன்றத்திடம் இருந்து பதில் வரத் தாமதிக்கும் நிலை ஏற்பட்டாலும் நெதர்லாந்தின் இவ் உயர்நீதிமன்றமானது விடுதலைப்புலிகள்பற்றி முடிவெடுக்கும் சந்தர்ப்பமும் இருக்கின்றதாகத் தெரிகின்றது. எனவே, இவ்வழக்கானது தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெறும்வேளையில், நெதர்லாந்துவாழ் தமி;ழ்மக்கள் திரண்டு இவ்நீதிமன்றத்திற்கு வருகைதருவது பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், இவ்வழக்கின் முக்கிய சாட்சிகளான முநநயெnஇ கசநசமள என்ற பிரித்தானியா நெதர்லாந்து இரு நிபுணர்களின் (நுஒpநசவள) விடுதலைப்புலிகள் பற்றிய அறிக்கையை, அரசதரப்பானது தனது வாதாட்டத்திற்கு சாதகமாக இவ்வழக்கில் பயன்படுத்துகின்றது.

அதாவது,
விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகவும்;;;;;;;;
விடுதலைப்புலிகள் தாயகத்தில் தமிழ்மக்களை வன்முறையைப் பயன்படுத்தியே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும்
வெளிநாடுகளில் பயமுறுத்தியே தமிழ்மக்களிடம் நிதிசேகரிக்கப்பட்டதாகவும்
இலங்கையில் சிங்களஅரசால் கொண்டுவரப்பட்ட தமிழ்மக்களிற்கு எதிரான சட்டங்கள் சிங்களவர்களின் தரத்தை ஊக்குவிப்பதற்காகவே எனவும்
ஆனால், இவை தமிழ்மக்களிற்கு எதிரானவை இல்லை என்றும்
இதுபோன்ற இன்னும் பல முரண்பாடான கருத்துக்களை இவ்நிபுணர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இக்கருத்துக்களை அரசதரப்பானது கடந்த 12, 13 யூன் அன்று தங்கள் வாதாட்டத்தில் நீதிமன்றத்தில் முன்மொழிந்து, வாதாடி, விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக தெரிவித்திருந்தனர். அத்துடன் இவ்நிபுணர்களின் இக்கருத்துக்களை இந்த உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

எனவேதான் மக்கள் ஆதரவுள்ள ஒரு அமைப்பு சம்பந்தப்பட்ட வழக்கு நடைபெறும் வேளையில் தமிழ்மக்கள் இம்மன்றில் பார்வையாளர்களாக (எதிர்வரும் செப்ரம்பர், ஒக்ரோபர் மாதத்தில்) பெருமளவில் சமூகமளிப்பது முக்கியமானதாகும். எனவே,

மக்களே நல்லதீர்ப்பானது உங்கள் கையிலும் தங்கியிருக்கின்றது.

Source: Nieuws.nl