யாழில் கரையோரப்பகுதிகளில் படையினரின் தேவைக்கா சுவீகரிக்கப்ட்டுள்ள காணியினை அளவீடு செய்ய எடுத்த முயற்சி அரசியல் வாதிகள் மக்களின் எதிர்பால் கைவிடப்பட்டுள்ளது.

யாழ்.கரையோரப் பகுதிகளில் படை தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள 36 குடும்பங்களுக்குச் சொந்தமான 127 ஏக்கர் காணியை அளவீடு செய்ய நில அளவை திணைக்களத்தினால் நேற்று எடுத்த முயட்சிகள் அனைத்தும் பொது மக்கள் மற்றும் தமிழ் அரசியல் வாதிகளின் எதிர்ப்பால கைவிடப்பட்டுள்ளது.

வலி.வடக்கில் உள்ள சேந்தான் குளம், கீரிமலை மற்றும் திருவடிநிலை போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இவ் முயட்சியே காணி உரிமையாளர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இணைந்து முறிகடிக்கப்பட்டுள்ளது.

போர் முடிவடைந்த மக்கள மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களின் பெரும்பாலான நிலங்களை படையினர் மற்றும் கடற்படையினர் இன்னமும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.

இவ்வாறு கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள நிலங்களை சட்டப்படி சுவீகரிக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அண்மையில் அச்சுவேலி, திக்கம் மற்றும் நுனாவில் பகுதிகளில் சுவீகரிக்கப்ப்டட காணிகளை அளவிடு செய்வதற்கு நில அளவையல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயட்சிகள் பொது மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று திருவடி நிலையில் உள்ள 30 குடும்பங்களுக்குச் சொந்தமான 120 ஏக்கர் காணியினை சுவீகரிப்பதற்காக நில அளவையல் திணைக்கள அதிகாரிகள் வருகைதந்திருந்தனர். ஏற்கனவே குறித்த காணிகளில் உள்ள பற்றைக்காடுகள் படையினரால் தீயிடப்பட்டும், பனைமரங்கள் வெட்டப்பட்டு காணி அளவீடு செய்வதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த காணியின் உரிமையாளர்களுடன் அங்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், வலி.வடக்கு பிரதேச சபையின் உபதலைவர் எஸ்.சஜீவன், வல்வெட்டித்துறை நகர சபையின் உபதலைவர் சதீஸ் ஆகியோர் காணி அளவீடு செய்ய ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த பகுதியில் கூடி நின்றனர். இதனால் அங்கு காணிகளை அளவீடு செய்ய வருகைதரவிருந்த நில அளவைத்திணைக்களத்தினல் அங்கு வருகை தராமல் திரும்பிச் சென்றனர்.

அங்கிருந்து புறப்பட்ட நில அளவைத் திணைக்களத்தினர் சேந்தான் குளப்ப குதியில் உள்ள ஆரோக்கிய நாதர் தேவாலையத்திற்கு சொந்தமான 4 ஏக்கர் காணியை அளவிடுவதற்குச் சென்றிருந்தனர்.

இதன் போது குறித்த தேவாலையத்தின் பங்குத்தந்தை அக்காணியின் உறுதியினை காண்பித்து காணியினை அளப்பதற்கு வருகைதந்த திணைக்களத்தினரை விலகிச் செல்லுமாறு கேட்டிருந்தார்.

அங்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமகாண சபையின் உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் குறித்த தேவாலையத்தினை புனரமைப்பதற்கான நிதியினை வடமாகாண சபை உறுப்பினர்களிடம் இருந்து பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தனர்.

இதற்கிடையில் அங்கு வந்த இளவாலைப் காவல்துறையினர் திணைக்கள அதிகாரிகளின் செயற்பாட்டினை தடுத்து நிறுத்துவதற்கான காரணம் தொடர்பாக அங்கு நின்ற அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

சேந்தான் குளப்பகுதியிலும் காணி அளப்பதற்கு எதிர்ப்பு எழுவதை அவதானித்த நிலவளவை திணைக்களத்தினர் அங்கிருந்தும் விலகிச் சென்று கீரிமலையில் உள்ள ஜே.226 கிராம சேவகர் பிரிவில் உள்ள 6 குடும்பங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் காணியினை அளப்பதற்கு முயட்சிகள் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த காணியில் 5 கல்வீடுகளும், ஒரு சமாதிக் கோவிலும் அமைந்துள்ளது. இருப்பினும் அங்கும் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த இறுதி முயட்சியினையும் முறியடித்தனர்.

இதனால் சுவீகரிப்பதற்கான நேற்று அளக்கவிருந்த 127 ஏக்கர் காணியும் அளவீடு செய்யாமலேயே திணைக்கள அதிகாரிகள் வெளியேறிச் சென்றிருந்தனர். நேற்று அளவிடவிருந்த 127 ஏக்கர் காணியும் பொது மக்கள், தேவாலையம் மற்றும் முன்பள்ளிக்குச் சொந்தமான காணிகளாகும்.

இவ்வாறு வலி.வடக்கில் இருந்து மாதகல் வரைச் செல்லும் கரையோரப் பகுதியினை ஆக்கிரமித்து காணிகள் சுவீகரிக்கப்பட்டால், சேந்தான் குளம், வலித்தூண்டல் மற்றும் மாதகல் பகுதிகளில் கடற்றொழிலை நம்பி வாழ்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.youtube.com/watch?v=fPpfvHZcNmY

நன்றி: சங்கதி24