ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரி வந்த இலங்கையர்கள் 153 பேரை அந்நாட்டிடம் ஒப்படைப்பதற்கு ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

முன்னதாக, தஞ்சம் கோரி வந்த 41 அகதிகளை கடலிலேயே விசாரித்து, நிராகரித்த பின், தமது கடற்படையினர் அவர்களை இலங்கையிடம் ஒப்படைத்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு உறுதிசெய்துள்ள நிலையில் இந்த இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புகலிடம் கோரியவர்கள் நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறியது குறித்த வழக்கை சந்திப்பார்கள் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த 153 பேரில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். தாங்கள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் வழக்குகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

girl

153 பேருடன் சென்றுள்ள படகில் தமது 3 வயது குழந்தையான பாப்ரினா இருப்பதாகவும், அவரை காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவருடைய தந்தை ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

http://bcove.me/3fel6fy2

Source: Channel 4