தமிழினப் படுகொலையாளர்களை விசாரிக்க ஐநா தயார் சாட்சியமளிக்க தமிழர் நாம் தயாராகுவோம். July 8, 2014 News சிறீலங்கா அரசாங்கம் 1948ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வரும் தமிழினக் கருவறுப்புச் செயற்பாடுகள் அனைத்தும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஆவணப்படுத்தப்படுகின்றமையானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையில் ஐநா விசாரணைக் குழுவானது 2002 ம் ஆண்டுக்குப் பின் இன்று வரை இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சர்வதேச சட்ட மீறலை விசாரிக்க ஆயத்தமாகுவது அனைவரும் அறிந்ததே. இந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் எமது பொறுப்பை உணர்ந்து எமது கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும்.சிறீலங்கா அரச பயங்கரவாத இன அழிப்பு கோரத் தாண்டவத்தில் சிக்கி சின்னா பின்னமாகி, உலகெங்கும் சிதறிக் கிடக்கும் எம் உறவுகள் தான் தமிழருக்கு இழைக்கப்படும் கொடுமையின் சாட்சிகளாகவும் அவற்றை உலகுக்கு எடுத்துரைக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். எனவே, பாதிக்கப்பட்டோர் அனைவரும் சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளுக்கமைய ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் இவ்விசாரணைக் குழுவுக்கு நேரடியாகத் தமது சாட்சியங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மேற்கொள்கின்றது. ஆகையினால் காலத் தேவை உணர்ந்து, தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான எந்த வித தயக்கமும் இல்லாமல், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் தொடர்பு கொண்டு உரியவகையில் சாட்சியங்களை ஐநா விசாரணைக் குழுவுக்கு வழங்க முன்வருமாறு பாதிக்கப்பட்ட அனைவரையும் அழைக்கின்றோம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானிய 02033719313