இலங்கையின் பழமை அதன் பாரம்பரியத்தினை பேணிப் போற்றும் மட்டுமாநகரில் தழிழரின் பாரம்பரியக் கலையான கூத்துக்கலை அதன் தனித்துவப் பண்பு மாறாது இன்றளவிலும் ஆடப்பட்டும், பேணப்பட்டும் வருகின்றன.

அவ்வகையில் மட்டக்களப்பில் வடமோடி, தென்மோடி, மகுடி, வசந்தன், பறைமேளக் கூத்து……. என பலதரப்பட்ட மக்களின் வாழும் கலைகள் பிரதான இடத்தைக் கொண்டுள்ளன. இதில் வடமோடி, தென்மோடிக் கூத்துக்களுக்கு தனிச்சிறப்பிடமேயுண்டு.

koothu-1

இவை இவ்வாறு இருக்க மட்டகளப்பு பிரதேசத்தில் நாவலடி ஸ்ரீ மாரி கடலாடசி அம்மன் ஆலயத்தில் இன்று மிகவும் சிறப்பான முறையில் “அர்ச்சுனன் தவநிலை” என்ற வடமோடிக் கூத் தை நாவலடி மக்களால் அரங்கேற்றம் செய்தனர்.

இதில் பெருமையுடன் கூற வரும் விடயம் யாதெனில் இரு பெண்கள் தயக்கமின்றி மிகவும் உற்சாகத்துடனும் மகிழ்வுடனு ம் பூரண விருப்பம் மற்றும் திருப்தியுடனும் இக்கூத்தில் பங்கேற்று அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளனர்.

koothu-3

எத்தனையோ உயிர்களை சுனாமி ஆழி பேரலை காவு கொண்டும் இந்த கூத்து இடம் பெற்ற போது அணைத்து கவலைகளையும் மறந்து நாவலடி மக்கள் அனைவரும் மிக விருப்பத்துடன் வரவேற்றமை ஒரு சிறப்பம்சமாகும் .

மற்றும் இன்றிஇந்த கூத்துக் கலைக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதுடன் தனது கிராமத்தில் இருக்கின்றவர்களின் திறமையை வெளியுலகத்துக்கு கொண்டுவரும் நோக்குடன் அவர்கள் எடுத்த பாரிய முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழிப்பேரலையில் இழந்த இழப்புக்கள், வடுக்கள் ஏராளம். ஆனபோதிலும நாவலடி கிராமத்தில் இந்த கூத்து அரங்கேற்றப்படுவது பாரம்பரிய கலையின் இருப்பினைச் சுட்டி நிற்பதோடு, பெண்கள் அதில் விருப்பத்துடன் பங்கேற்பது இங்கு கவனிக்கத்தக்கதோர் அம்சமாகும்

Source: Battinews