அரசசார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், சிவில் சமூகக்குழுக்களையும் ஊடகங்களுடன் தொடர்புபட்டு இயங்குவதை நிறுத்தும் விதத்தில் பாதுகாப்பு இலங்கை அமைச்சு அண்மையில் சில உத்தரவுகளை இட்டிருந்தது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது குறித்து வெளியான செய்திகள் தம்மை கவலையடைய செய்திருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

இது இலங்கையின் நீண்டகால ஜனநாயக பாரம்பரியங்களை உதாசீனம் செய்வதாக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலகத்தின் பேச்சாளர் ஜென் பிசாகி (JEN PSAKI) இதனை வொஷிங்டனில் தெரிவித்தார்.

இலங்கையின் ஜனநாய விழுமியங்களிற்கு சிவில் சமூக அமைப்புக்களும் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் முக்கியமான பங்களிப்பை வழங்குகின்றன. அவை சுதந்திரமாக செயற்பட இலங்கை அரசு இடமளிக்க வேண்டுமென நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம் எனவும் ஜென் பிசாகி தெரிவித்தார்.

psaki

Concerns Regarding Sri Lankan NGO Freedom of Expression

The United State has expressed its concerned over reports that the Sri Lankan Ministry of Defense has ordered registered Non-Governmental Organizations (NGOs) and civil society groups to cease their media engagements and activities.
US State Department spokesperson Jen Psaki said the order undermines Sri Lanka’s longstanding and proud democratic traditions, including freedom of speech and freedom of assembly.

We strongly urge the Government of Sri Lanka to allow civil society organizations and NGOs, which play a vital role in supporting Sri Lanka’s democratic values, to operate freely, Jen Psaki said.

The MOD had on Monday told NGOs, through a letter, not to go beyond their mandate.

The MOD letter sent to NGOs notes that some of them conduct press conferences, workshops, training for journalists, and dissemination of press releases which is beyond their mandate.

“We reiterate that all Non-Governmental Organizations should prevent from such unauthorized activities with immediate effect,” the letter said.

Source: Asian Tribune