கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கனடாவின் ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளரிடையேயான விவாதம் July 11, 2014 News கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கனடாவின் ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளரிடையேயான விவாதம் எதிர்வரும் யூலை 15 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு ஸ்காபரோவில் இடம்பெறவுள்ளது. கனடிய வரலாற்றில் முதன் முறையாக சமூக அமைப்பொன்று இத்தகைய நிகழ்வை நடத்துவது இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. 2.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட, கனடாவின் மிகப்பெரும் நகரான ரொறன்ரோவிலேயே அதிக எண்ணிக்கையான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முன்னணிப் போட்டியாளர் ஐவரும் இவ்விவாதத்திற் கலந்து கொள்ள இருக்கின்றனர். தற்போதைய நகரத் தலைவர் திரு றொப் போட், மறைந்த தலைவர் யக் லேடன் அவர்களின் இணையர் திருமதி ஒலிவியா சௌ, முன்னாள் ஒன்ராறியோ பிசி கட்சியின் தலைவர் திரு யோன் ரோறி, தற்போதைய நகரசபை உறுப்பினரும் ரிரிசியின் தலைவருமான கரன் இசுரின்சு மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் திருடேவிட் சொக்னாக்கி ஆகியோரே இந்நிகழ்விற் சொற்போர் நடத்த உள்ளனர். இந்த நிகழ்வில் முன்னணிப் போட்டியாளர் ஐவரும் கலந்துகொள்ளவது தமிழ்ச் சமூகத்திற்கு மிகப்பெரிய வெற்றியாகும். அதுமட்டுமல்லாது தமிழ்க் கனடியரின் உறுதியையும் வளர்ச்சியையும் இது காட்டி நிற்பதோடு பிறகு சமூகத்தார் எமக்கு முக்கியத்துவம் அளிப்பதையும் மதிப்பளிப்பதையும் காட்டுகிறது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு கனடியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. நுழைவுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது என்பதுடன் அனைவரும் பங்குபெறும் இந் நிகழ்வுக்குத் கனேடியத் தமிழ் மக்கள் தங்களது பிற சமூக நண்பர்களையும் அழைத்து வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு: (416)-240-0078 / info@canadiantamilcongress.ca நிகழ்வு இடம்பெறும் இடத்தின் முகவரி: Global Kingdom Ministries – Auditorium 1250 Markham Road (Immediately South of Hwy 401) Toronto, ON M1H 2Y9 Canada Canadian Tamil Congress organized a Mayoral debate in Toronto On 15th July at 6:30 pm, a debate will be held among the upcoming candidates for Toronto mayor election in Scarborough town in Canada. For the first time in Canadian history, this event is being conducted by a social organization. With a population of 2.7 million in Canada’s largest city of Toronto, a large number of Tamils are living there who are becoming as significant electorate. All the leading five contestants are expected to attend this debate. Present city mayor Rob Ford, Late leader Jack Layton’s wife Olivia Chow, Former leader of the Ontario Progressive Conservatives Party Mr. John Tory, Current municipal councilor and former TTC chair Karen Stintz and Former Toronto Councillor David Soknacki will jointly participate in the debate. Because these five leading people participating in this event , it will be the greatest victory for the Tamil Community in Canada. Moreover it will present the development and stability of the Tamil Canadian Community, which would gain respect. The Canadian Tamil Congress calls upon all to participate in this important historic event. There is no entry fees to participate and all the Canadian Tamil people should participate and encourage their friends and other social connections to participate. For more information: Contact : (416)-240-0078 / info@canadiantamilcongress.ca Source: Tamilcnn