திருகோணமலை மாவட்டத்தின் நகர்ப்பகுதியில் ஈழத் தமிழர்களின் சுமார் 1200 ஏக்கர் நிலத்தை சீனாவின் ராணுவ வளர்ச்சித் திட்டங்களுக்கு சமீபத்தில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தின் மேற்கு திசையில் அமைந்துள்ள ஒருமுக்கிய பகுதியும் பாரிய அளவிலான இவ்வளவு ஏக்கர் நிலமும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படியில் மிக குறைந்த விலைக்கு கொடுத்துள்ளது ஸ்ரீலங்காவின் மகிந்த அரசு.

செம்பூர் நிலங்களை எடுத்தது போல இந்த திருகோணமலையின் அருகே உள்ள நிலங்களை கைப்பற்றி / குத்தகைக்கு எடுத்துள்ளன சீன அரசு, இந்த நிலத்தில் பிரிட்டிஷ் பயன்படுத்திய இருபதுக்கும் மேற்பட்ட பெரிய கொடோன்கள் வீடுகள், கோயில்,மசூதி என்று இருக்கின்றன சீனாவின் பே (China Bay area ) என்று அழைக்கும் பகுதிகளில் இந்த இரண்டு நாடுகள் வாங்கிய நிலங்கள் ஒவ்வொன்றும் நேர் எதிரான திசையில் உள்ளமை குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்….!

trinco-2
சீனாவின் கடல் விரிகுடா பகுதியில் ஏற்கனவே சிங்கள குடியிருப்புகள் நிறைவேறியுள்ள பகுதிகளில் இந்த இடம் கையளிக்கப்படவுள்ளன,எஞ்சியுள்ள இடங்கள் அனைத்தும் தமிழர்களின் நிலங்களும்,தமிழ் முஸ்லிம்களின் நிலங்களும் உள்ளன.

இந்த இடம் முழுவதும் கையளிக்கப்பட்டால் சுமார் பல தமிழ், இஸ்லாமிய குடும்பங்கள் தங்களது நிலங்களை இழக்க நேரிடும். இது குறித்து முஸ்லிம் தலைவர்கள் இதுவரை மௌனமாக இருந்து வருகின்றனர்.

சீனாவின் பாதுகாப்பு சம்பந்தமான அபிவிருத்திப் பணிகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்த நிலத்தில், சீன அரசாங்கம் இராணுவத் தளம் ஒன்றை நிர்மாணிக்கவிருப்பதாக இப்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அங்கு இராணுவத் தளம் அமைக்கப்பட்டால், அது இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பில் விரைவில் இந்தியா சிறிலங்காவிடம் எதிர்ப்பினைத் தெரிவிக்கலாம் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Saurce: puradsifm.com