சிறிலங்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தரமற்ற பழங்கள் மற்றும் மரக்கறி வகைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இதனைத் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் இருந்து பிரதானமாக கொய்யா, மாம்பழம் மற்றும் பரங்கி வகையைச் சேர்ந்த மரக்கறி வகைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அவை உரிய தரத்தை கொண்டிருப்பதில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மா மற்றும் கொய்ய கனிகளை பழுக்க செய்வதற்காக அதிக இரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறிலங்காவில் உள்ள ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி பொருட்களின் தரத்தை உறுதி செய்யாத பட்சத்தில், சிறிலங்காவில் இருந்து பழங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் இருந்து அல்போன்சா வகை மாங்கனிகளை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.