ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்குழு மூன்று நாடுகளில் விசாரணைகளை முன்னெடுக்க உத்தேசம் July 21, 2014 News ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறுவப்பட்டுள்ள விசாரணைக் குழுவினர் மூன்று நாடுகளிலிருந்து விசாரணைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது. நியூயோர்க், ஜெனீவா மற்றும் பாங்கொக் ஆகிய நகரங்களில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.. இலங்கையில் விசாரணை நடாத்துவதற்கு அனுமதி கோரப்பட உள்ளதாக ஐக்கிய நாடுகள் தகலவ்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச விசாரணைக்குழுவினர் இலங்கையில் விசாரணை நடாத்த அனுமதியளிக்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கத் திட்ட வட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நவீன தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிக்கக் கூடாது என இலங்கையில் எவ்வித சட்டங்களும் கிடையாது என்ற போதிலும், சாட்சிமளிப்போருக்கு தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது, சாட்சியமளிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும்நோக்கில் சாட்சியாளர்களின் பெயர் விபரங்கள் இருபது ஆண்டுகளுக்கு இரகசியமாக பேணப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது இரகசிய விசாரணையை ஏற்கமுடியாது! – என்கிறது இலங்கை அரசு ஐ.நா விசாரணைக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விபரங்களை வெளியிடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் மறுத்திருந்தார். இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், விசாரணையை மேற்கொள்பவர்கள் யார் என்று தெரியாமல் எவ்வாறு அந்த விசாரணை மீது நம்பிக்கை வைக்க முடியும்? இந்த அநாமதேயமான விசாரணைக்குழு, ஒரு வேளை, கங்காரு நீதிமன்றத்தை விடவும் மோசமானதாக இருக்கலாம். எனவே இலங்கை அரசாங்கம் இதனைப் புறக்கணிக்கும்.குறைந்தபட்சம் விசாரணையை மேற்கொள்பவர்களின் அடையாளங்கள் கூட வெளிப்படுத்தப்படாத நிலையில், இலங்கையின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பது அபத்தம். உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தவே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்று அனைத்துலக நிபுணர்களை நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவை வெளிநாட்டு அமைப்பு என்று திரிபுபடுத்துவது தவறு. உள்நாட்டு செயல்முறைகளுக்கு ஆதரவளிப்பதே அதன் நோக்கம். உள்நாட்டு பொறிமுறைக்குள் தான் அது இருக்கும். எந்தவொரு சூழ்நிலையிலும், இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறையை அனுமதிக்காது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். UN probe panel to keep witness identities secret The United Nations panel, appointed to investigate allegations of human rights violations and war crimes, which allegedly occurred during the last phase of the Sri Lankan civil war, is likely to keep the identities of those who testify before it confidential for 20 years, like the Darusman panel on Lanka did, UN sources claim. This step has been taken to protect the witnesses from possible intimidation. It was earlier reported that the UN panel will hold hearings in three separate locations, New York, Geneva and Bangkok. The UN team will also seek permission to hold sessions in Sri Lanka, although it is highly unlikely that the request would be granted. Tamil expatriates and Lankan Tamil rights groups in North America, Europe and Australia, are likely to testify. The UN also hopes to reach Tamils living in Sri Lanka through telephone, video conferencing and skype. Meanwhile, the Sri Lankan Government has extended the mandate of the Presidential Commission inquiring into the missing persons so that it can inquire into the ‘principle facts and circumstances that led to the loss of civilian life during the internal armed conflict that ended on May 19, 2009, and whether any person, group or institution directly or indirectly bears responsibility in this regard by reason of a violation or violations of international humanitarian law or international human rights law.’ Saurce: Ceylontoday