கறுப்பு யூலை 31 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கவன ஈர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் பின்வரும் நாட்களில் மக்களவையால் (NCET) நடாத்தப்படுகின்றன.

கறுப்பு யூலை கவனஈர்ப்பு நிகழ்வு 23.07.2014

நோர்வேஜிய மக்களிற்கான ஒரு கவனஈர்ப்பு நிகழ்வு மாலை 16:00 மணி தொடக்கம் 17:00 மணி வரை Stortinget T-bane இற்கு அருகாமையிலுள்ள Egertorget இல் நடைபெறும்.

கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வும் கண்காட்சியும் 24.07.2014

83ம் ஆண்டு இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் தமிழ்மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ் வள ஆலோசனை மையத்தில் (Nedre Rommen 3) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரம்: மாலை 18:00 மணிக்கு
காலம்: 24.07.14 வியாழக்கிழமை
இடம்: தமிழ் வள ஆலோசனை மையம் (TRVS lokalet, Rommen).

23 july-14

தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்பில் பெரும் உயிர், உடைமை இழப்பை ஏற்படுத்திய 1983 கறுப்பு யூலை 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டும் பல்லாயிரக்கணக்கான பெறுமதியுள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டு தென்னிலங்கையிலிருந்து அகதிகளாகத் துரத்தியடிக்கப்பட்டார்கள்.

65 ஆண்டுகளுக்கும் மேலாக தொடச்சியாக சிங்கள இனவாத அரசுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்பின் உச்ச கட்டமாக 70 000 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டமையும் 146 000 இற்கு மேற்பட்ட மக்கள் காணமல் போயும் பாரிய இன அழிப்பு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது. தற்பொழுதும் சிங்கள குடியேற்றத்திற்கான நிலஅபகரிப்பு தாயக பிரதேசம் எங்கும் மிக வேகமாக இடம்பெற்று வருகிறது. தமிழ் இனத்திற்கெதிரான சத்தமில்லாத யுத்தம் தொடர்கின்றது.

தொடரும் திட்டமிட்ட இன அழிப்பை தடுத்து நிறுத்துவோம். எம் உரிமையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.

படுகொலை செய்யப்பட்ட அனைத்து உறவுகளை நினைவு கூர்ந்து எம் தாயத்தின் விடிவுக்காய் உறுதி எடுக்க அனைவரையும் அணி திரண்டு வருமாறு அன்பாக வேண்டிக்கொள்கிறோம்.

ஒழுங்குகள்: நோர்வே ஈழத்தமிழர் அவை

Download flyer her