கிளஸ்கோ நகரில் அணி திரண்டுள்ள ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள்- 23/07/2014 July 23, 2014 News ஸ்கொட்லாந்து கிளஸ்கோ நகரில் ஆரம்பமாகியுள்ள 20வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் முதல்நாளான இன்று ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்பதைத் தடுத்து நிறுத்தவும், தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் புலம்பெயர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சுவிஸ், ஜேர்மன், மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் உணர்வு மிக்க ஈழத் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளப் போவதில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது Saurce: TamilCNN