சர்வதேச நிபுணர் குழு நியமனத்தை எதிர்க்கும் விமல் வீரவன்ச! July 23, 2014 News யுத்தக் குற்றங்கள் மற்றும் காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க, சர்வதேச நிபுணர் குழு நியமிக்கப்பட்டமைக்கு அமைச்சர் விமல் வீரவன்சவினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்குலக நாடுகளின் கைப்பொம்மைகளாகவே இந்த நிபுணர்கள் செயற்படுவார்கள் என விமல் வீரவன்சவினால், மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது நிபுணர்கள் நியமனம் சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு வழியமைத்துள்ளதாகவும், எனவே நிபுணர் குழு நியமனம் குறித்த வர்ததமானி அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக திருத்தி அமைக்க வேண்டுமெனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் படையினரை அழிக்கும் நோக்கில் இந்த நிபுணர்குழு யோசனையை சிலர் முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது நிபுணர் குழு நியமனத்தின் ஊடாக, நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்ய வாய்ப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள, விமல் வீரவன்ச, ஐ.நா மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழுவின் விசாரணைகளை இந்த நிபுணர் குழு நியமனம் நியாயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Saurce: Seithy.com