நோர்வேஜியர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் நுழைவிசைவு வழங்கக் கூடாது என்று பாஜகவின், மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

நேற்றுமுன்தினம் மாலை கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில், இடம்பெற்ற மோடி ஆட்சியின் கீழ் இந்தியா என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய போதே சுப்பிரமணியன் சுவாமி, இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நோர்வேயின் அமைதி முயற்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், மனித உரிமைகள் முனையில் சிறிலங்கா அரசாங்கம் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்று உசுப்பேற்றியதுடன், நோர்வேஜியர்களுக்கு நுழைவிசைவு வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் சிறிலங்காவுக்காக நோர்வே தூதுவர் கிறெட் லோசெனும் கலந்து கொண்டிருந்தார்.

நோர்வேஜியர்களுக்கு நுழைவிசைவு வழங்கக் கூடாது என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.