நோர்வேஜிய மக்களிற்கான  கவன ஈர்ப்பு நிகழ்வு நேற்று மாலை 16:00 மணி தொடக்கம் 17:00 மணி வரை Stortinget T-bane இற்கு அருகாமையிலுள்ள Egertorget இல் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தமிழர்கள் மீது 1983 முதல் 2009 வரை மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு நிழற்படங்கள்,  துண்டுப்பிரசுரங்கள் மூலம் நோர்வேஜிய மக்களிற்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதில் அதிகாமான இளையோர் பங்குகொண்டு நோர்வேஜிய மக்களிற்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்து தமிழ்மக்களுக்கு சிறீலங்கா அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட கொடுமைகளை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.