சிறிலங்காவில் தமிழர்கள் மீது இன வன்முறைகள் ஏவிவிடப்பட்ட கறுப்பு ஜூலையை நினைவு கூர்ந்து, பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் எட் மில்லிபான்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“கவலைக்குரிய வன்முறைகளால், தமிழர்களான ஆண்களும் பெண்களும், சிறுவர்களும் உயிரிழந்ததையும், இடம்பெயர்ந்ததையும், புலம்பெயர்ந்ததையும் நினைவு கூரும் வகையில் இந்த மாதம், கறுப்பு ஜூலையாக நினைவுகூரப்படுகிறது.

எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்ற எண்ணிக்கை சரியாகத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால், வன்முறைகளின் நினைவுகள் இன்னமும் உயிர்வாழ்கின்றன.

அதை ஒரு போதும் நாம் மறுந்து விடக் கூடாது என்பது முக்கியம்.

நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு இருதரப்பும் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைய, முன்னெடுக்கப்படும் அனைத்துலக விசாரணை, ஒரு சிறிய நகர்வாக அமையும்“ என்று அவர் தெரிவித்துள்ளார்.