முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத புலம்பெயர் தமிழர்களின் கண்டன பேரணிகளும் ,நீதி வேண்டிய உண்ணாநோன்பு  விரதங்களும் ,வீதிமறிப்பு கவனயீர்ப்பு நிகழ்வுகளும்  உலகம் பூராகவும் செய்யப்பட்டது.

இன்று ஐந்து  ஆண்டுகள் கடந்தும்  ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு  எவ்வித நீதியும்,  அரசியல் தீர்வும் வழங்காத போதிலும் எமது நீதிக்கான உரிமைப்போராட்டத்தை முள்ளிவாய்க்கால் காலத்திலும் விட அதிவேகத்தோடு முன்னெடுக்கப்படவேண்டிய காலகட்டத்தில் நிற்கின்றோம்.
இவ் வேளையில் எதிர்வரும் 08.09.2014 முதல்  ஜெனீவாவில் ஒன்றுகூட இருக்கும் ஐநா மனிதவுரிமை சபை அமர்வுகளின் கால கட்டத்திலும் ,ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைக்குழு அமைக்கப்பட்ட நிலையிலும்  எமது நீதிக்கான போராட்டத்தை வலுவோடு முன்னெடுக்க வேண்டி நிற்கின்றோம்.
சர்வதேச சமூகம் எமது தொடர்போராட்டம் காரணமாக தற்போது எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்கின்றன.இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை  எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட  முடியாது என்பதை உலகம் மெல்ல உணர்கின்றது .
வரலாறு எம்மை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. எமது தேசம், வரலாற்றில் என்றுமில்லாதவாறு மும்முனை நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. ஆயினும், உரிமைக்கான போராட்டம் எக்கட்டத்திலும் கைவிடப்படமுடியாதது.
போராடுவோம்! இறுதி மூச்சுள்ளவரை, இலட்சியப் பயணத்தை தொடர்வோம்; போராடுவோம்! விடுதலைக்கான பாதையென்பது வீழ்ச்சிகளால் விலகுவதோ, துரோகங்களால் துவண்டுவிடுவதோ அல்லது பின்னடைவுகளால் பின்வாங்கி விடுவதோ அல்ல. மாறாக, தடைகளைத் தகர்த்து விழ விழ விடாமுயற்சியுடன் எழுவது.
ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு ஐநா நோக்கி  ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் அலையென எழுவோம் .
ஜெனிவா பேரணி
 காலம்: 15.09.2014 திங்கட்கிழமை 
நேரம: 14.00 மணி தொடக்கம் 17.00 மணி வரை
இடம்: ஐ.நா முன்றல், முருகதாசன் திடல்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும் ” என்ற தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபனின் நினைவுசுமந்த இக்காலப்பகுதியில் இன அழிப்பிற்கு நீதி கேட்டும், தனித் தமிழீழத்தினை அங்கீகரிக்கக் கோரியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
பயணஒழுங்குகள்:
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு