பூர்வீகமண்ணில் வாழமுடியாது புலத்தில் இரவல் மண்ணில் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றோம். ஆனாலும் மண்ணையும் மக்களையும் மறக்காது அவர்களின் விடுதலைக்காக காலம் காலமாக கடினமாக உழைத்து வருகின்றோம்.

ஆனாலும் இன்னும் எமது நிலம் இருண்டுதான் இருக்கின்றது சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
இன்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் எங்கள் தோள்களில்தான் விடுதலைக்கான புனிதமான பணி சுமத்தப்பட்டிருக்கின்றது.இந்த பணிகளை நாம் ஆத்மாத்தமாக முன்னெடுத்து செல்கின்ற போதுதான் எமது இனத்திற்கான சுதந்திரக்காற்றை பெற்றுக்கொடுக்க முடியும்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் பல்வேறு போராட்டக்களங்கள் சர்வதேசப்பரப்பெங்கும் திறக்கப்பட்டு விடுதலைக்கான பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதேவேளையில் தமிழ்மக்களை விடுதலைத்தாகத்தோடு ஒன்றித்து இணைப்பதர்க்கான எழுச்சி நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறான ஒன்றாகத்தான் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வும் அமைகின்றது.

எதிர்வரும் 23.08.2014 அன்று Staffeldts gata 4 இல் அமைந்துள்ள STORSALENMENIGHET என்ற முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது. இந்நிகழ்வில் சிறப்பு பேச்சு, நாடகம், குறும்படம், தாயகப்பாடல்கள் மற்றும் கலைபண்பாட்டுக்கழகத்தின் கன்னிமுயற்சியாக சுதந்திரததாண்டவம் நடனப்போட்டி என்பன இடம்பெற இருக்கின்றன இப்போட்டியானது நடனக்கலைஞர்களுக்கான மக்கள் அங்கீகாரம் கிடைக்கும் அரங்கவெளிப்பாடாக அமைய இருக்கின்றது.

இதேவேளை இந்நிகழ்வில் பெறுமதி வாய்ந்த சீட்டிழுப்பும் இடம்பெற இருக்கின்றது

சீட்டிழுப்பிற்கான முதல் பரிசாக உந்துருளியும் இரண்டாம் பரிசாக தொலைக்காட்சியும் மூன்றாம் பரிசாக ஈருருளியும் பத்து ஆறுதல் பரிசில்களும் வழங்கப்பட இருக்கின்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினரக  கலந்துகொண்டு அக்கினித்தாண்டவம்             ஆடவருகின்றார் வியய் தொலைக்காட்சி புகழ் பிறேம்கோபால் 

மற்றும் கீர்த்திகா பிறேம்கோபால்அத்தோடு சுதந்திதாண்டவத்தில் 

வெற்றிபெறும் போட்டிக்குழுக்களுக்கு முதல் பரிசு 10000குரோனரும் இரண்டாம் பரிசு 5000குரோனரும்மூன்றாம் பரிசு 2500குரோனரும் 

வழங்கி  மக்கள் அங்கீகாரத்தோடு சிறப்பிக்கப்பட

இருக்கின்றார்கள்.