வடக்கு ஊடகர்கள் அடக்கு முறைக்கு எதிராக யாழில் திரண்ட ஊடக அமைப்புக்கள்! July 31, 2014 News ஊடக அடக்கு முறைகளைக் கண்டித்தும்,ஓமந்தையில் வைத்து ஊடகவியலாளர்களின் மீது கஞ்சா பொய் குற்றச்சாட்டினை சுமத்தி தடுத்துவைக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் வடக்கு,தெற்குஊடகஅமைப்புக்கள் ஒன்றிணைந்துமாபெரும் கண்டனப் போராட்டம் இன்று நண்பகல் யாழ்.பேருந்து நிலையத்தின் முன்பாக நடைபெற்றுள்ளது. யாழ்.ஆஸ்பத்திரி வீதி போக்குவரத்தினை முழுமையக முடக்கியும்,யாழ்.பஸ்நிலையத்தில் இருந்து யாழ்.போதனாவைத்திய சாலைவரைக்கும் நடைபவணியாகவும் சென்று அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஊடக அடக்கு முறைக்கு எதிரக பலத்தகோசங்களை எழுப்பியிருந்தனர் . நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டம் சுமாமர் ஒருமணித்தியாலம்வரைக்கும் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கறுப்பு உடைகளை அணிந்தும்,கறுப்புத் துணிகளால் தமது வாய்களை கட்டியும் தமது எதிர்பினை வெளிப்படுத்தியிருந்தனர். பேருந்து நிலையம் முன்பாகஒன்று கூடிய வடக்குத் தெற்கு ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான ”அடக்காதே அடக்காதே ஊடகத்தை அக்காதே,வேண்டும் வேண்டும் ஊடகசுதந்திரம் வேண்டும், வைக்காதே வைக்காதே கஞ்சாவை வைக்காதே,உண்மைக்குப் பரிசு கஞ்சாபொதியா?,ஆசியாவின் அதிசயம் கஞ்சா பொதியா?”என்று பலத்தகோசங்களை எழுப்பியிருந்தனர். ஊடக படுகொலைகளை நிறுத்து,வடக்கு ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகளா?,ஊடக படுகொலைக்கு நீதி வேண்டும் மாற்றுக் கருத்திற்கு மரணம் தான் தீர்வா?, என்று எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் தாங்கியவாறு ஊடகவியலாளர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடை பெற்ற இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சுதந்திர ஊடக இயக்கம், வட இலங்கைபத்திரிகையாளர் சங்கம். இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,வவுனியாமற்றும் வன்னி ஊடக அமைப்புக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தன. இதேவேளை இப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு,தமிழ் தேசியமக்கள் முன்னணி,தமிழ் தேசிய முற்போக்குக் கட்சி, இலங்கை ஆசிரியர் சங்கம்,வலி.வடக்குமீள்குடியேற்றக் குழு ஆகியவற்றின் சார்பிலும் பலர் கலந்துகொண்டனர்.