தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த கீழ்த்தரமான கட்டுரை ஒன்றுக்கு பாதுகாப்பு அமைச்சு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.

ஜெயலிதா இந்திய பிரதமர் மீது காதல் கொண்டிருப்பதாகவும், இதற்காக அவர் பல காதல் கடிதங்களை எழுதி இருப்பதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிராக இந்திய அரசாங்கத்தில் இருந்து இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமரிடமும், தமிழக முதல்வரிடமும் நிபந்தனயைற்றவகையில் மன்னிப்பு கோருவதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கட்டுரையை பிரசுரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்படவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.