கோட்டாபய ராஜபக்ஷவை அமெரிக்காவின் நான்கு சட்டங்களின் கீழ் கைது செய்ய முடியும் என்று நியுயோர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

1996ம் ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த யுத்தகுற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனைத் தவிர, அமெரிக்காவின் சொத்து மற்றும் வரி ஏய்ப்பு சட்டத்தின் கீழும், குடிரவு சட்டத்தின் கீழும் கோட்டாய கைது செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய இராணுவத்தில் இருந்த போது, அவர் தலைமையிலான இராணுவக் குழு ஒன்று 1980களில் மாத்தறையில் 100க்கும் அதிகமான பொது மக்களை சித்திரவதைக்கு உட்படுத்தி கொன்று புதைத்திருந்தனர். இந்த எச்சங்கள் அண்மையில் மீட்கப்பட்டது. 

இது குறித்து விசாரணை நடத்தும் பொருட்டு அமெரிக்கா அவரை கைது செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மனித உரிமை மீறல் மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழும் கோட்டாபய ராஜபக்ஷவை அமெரிக்காவினால் கைது செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.