நான் முகவரி அற்றவளா புத்தகம் வெளியீட்டு வைக்கப்பட்டது! August 2, 2014 News நான் முகவரி அற்றவளா? புத்த வெளியீடு செல்வி மாளவி சிவகணேசன் அவர்களின் பாடலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. புத்தகவெளியீட்டை வைகோ மற்றும் காசி ஆனந்தன் ஆகியோர் அறிமுகம் செய்தனர். புத்தகத்தை வைகோ வெளிட அதனை இல.கோபாலசாமி பெற்றுக்கொண்டார். அருணகிரி மற்றும் இளங்கோவன் அவர்களுக்கு வைகோ அவர்கள் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டார். மாளவிகாவின் தந்தை மருந்துவர் சிவகணேசன் வைகோ அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளித்திருந்தார். புத்தக உரையை உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் ஆற்றியிருந்தார். சிறப்புரைகளை வைகோ மற்றும் ஓவியர் சந்தானம் அவர்களும் வழங்கியிருந்தனர். நன்னியுரையை அருணகிரி அவர்கள் வழங்கியிருந்தார். நன்றி: பதிவு