சிறிலங்கா அரசாங்கத்தின் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர்கள் ஜனாதிபதியையும், பாதுகாப்பு செயலாளரையும் பாதுகாப்பார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. 

கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இதனை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து குறிப்பிட்டுள்ளார். 
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக ஏற்கனவெ மூன்று சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். 

பின்னர் மேலும் மூன்று பேரை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்த நிலையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மங்கள சமரவீர யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து ஜனாதிபதியையும், கோட்டாபய ராஜபக்ஷவையும் பாதுகாப்பதற்காகவே இந்த நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.