சிறிலங்காவில் காவற்துறையினரின் பாதுகாப்பு என்பது அர்த்தமற்றதாக மாறி இருப்பதாக, மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் காணாமல் போனோரின் உறவினர்கள் நடத்திய கூட்டம் ஒன்றின் போது அத்துமீறி நுழைந்த பௌத்த பிக்குகள் சிலர் அதனை குழப்பியடித்தனர்.

இதன் போது காவற்துறையினர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, பொது மக்களை பாதுக்க முற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் குற்றவாளிகளே நீதிபதிகளாக இருக்கிறார்கள். அனைத்து சட்டத்துறையும் அரசாங்கத்தின் கையில் இருக்கிறது. ஜனநாயகம் மதிப்பற்றுள்ளது.

இந்த நிலையில் சிறிலங்காவின் சட்டத்திட்டங்களுக்கு கீழ் காணாமல் போனோரது உறவினர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.