வடக்கு கிழக்கில் இனவழிப்புக்கான ஆயுதமாக போதைப்பொருள் பயன்படுகிறது – சிவில் அமைப்புக்கள். August 14, 2014 News வடக்கு கிழக்கு பகுதிகளில் போதைப் பொருட்களும், மதுபானங்களும் இனவழிப்புக்கான ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இயங்கும் சிவில் அமைப்புகள் இதனைத் தெரிவித்துள்ளன. யுத்தம் நிறைவடைந்த பின்னர் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் பாரிய அளவு போதைப் பொருள் பாவனையும், மதுபாவனையும் அதிகரித்துள்ளன. மதுபானங்களுக்கான அனுமதி பத்திரங்களை அரசாங்கம் அதிகமாக வழங்கி இருக்கிறது.