நாட்டில் நிலவுகின்ற வரட்சியால் 14 மாவட்டங்களில் 5 இலட்சத்து 2,574 குடும்பங்களைச்சேர்ந்த 17 இலட்சத்து 50 ஆயிரத்து 575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.வட மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களும், கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உலருணவு பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அந்தந்த பிரதேச செயலகங்கள் அறிவித்துள்ளன.

வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில்  14,603 குடும்பங்களைச்சேர்ந்த 51,495 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 16,576 குடும்பங்களைச்சேர்ந்த 56,469 பேரும், மன்னார் மாவட்டத்தில் 20,928 குடும்பங்களைச்சேர்ந்த 76,870 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 21,294 குடும்பங்களைச்சேர்ந்த 74,844 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 31,284 குடும்பங்களைச்சேர்ந்த 1,20,051 குடும்பங்களைச்சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தின் 32,039 குடும்பங்களைச்சேர்ந்த 1,28,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மத்திய மாகாணத்தில் பொலநறுவை மாவட்டத்தில் 45,274 குடும்பங்களைச்சேர்ந்த 1,47,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனுராதபுரம் மாவட்டத்தில் 26,889 குடும்பங்களைச்சேர்ந்த 53,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணதின் அம்பாறை மாவட்டத்தில் 10,180 குடும்பங்களை சேர்ந்த 31,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 71,479 குடும்பங்களைச்சேர்ந்த 2,52,673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்pல் 20,368 குடும்பங்களைச்சேர்ந்த 90,264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் 1,39,664 குடும்பங்களைச்சேர்ந்த 4,73,125 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 25,412 குடும்பங்களைச்சேர்ந்த 88,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 26,584 குடும்பங்களைச்சேர்ந்த 1,06,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 14 மாவட்டங்களிலும் பெரும்பரப்பிலான விவசாய நிலங்கள் வரண்டுவிட்டதாகவும் குளங்கள் மற்றும் நீர் நிலைகள் வற்றிவிட்டமையால் கால்நடைகள் மற்றும் வனவிலங்களுகம் பாதிக்கப்பட்டுள்ளன.