சாட்சியங்கள் அளிப்பதற்கான ஐ.நாவின் கேள்விகள் உள்ளடக்கிய கேள்விக்கொத்துப் படிவங்கள் உள்ளே! August 16, 2014 News இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிபுணர் குழுவின் விசாரணைகளை ஆரம்பித்து விட்டனர். தற்போது சாட்சியங்கள் திரட்டுவதற்கான கேள்விக்கொத்து. அக்கேள்விக் கொத்துகளை உள்ளடக்கிய மாதிரிப் படிவம் கீழே தரப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களை ஐ.நா மனித உரிமை ஆணையகம் 12 வகையாக வகைப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழரும் தங்களுக்கு எந்த வகை பொருந்துகின்றதோ அப்படிவத்தைப் பூர்த்தி செய்து ஐக்கிய நாடுகள் சபையின் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்க முடியும் அதற்கான முகவரிகள் கீழே: மின்னஞ்சல் முகவரி: OISL_submissions@ohchr.org அஞ்சல் முகவரி: OISL UNOG-OHCHR 8-14 Rue de la Paix CH-1211 Geneva 10 Switzerland கீழே வகைப்படுத்தப்பட்டுள்ள கேள்விகள் மேல் சுட்டியை வைத்து அழுத்தி பவடிங்களை PDF வடித்தில் பெற்றுக்கொள்ளலாம்.1. Questionnaire of the Special Rapporteur on extrajudicial, summary or arbitrary executions நீதிக்குப் புறம்பான மற்றும் முறையான விசாரணையற்ற படுகொலைகள் தொடர் கேள்விக் கொத்து 2. Special Rapporteur on torture and other cruel, inhuman or degrading treatment or punishment சித்திரவதை, கொடூரமான, மனித நாகரீகத்திற்கு புறம்பானவகையில் நடாத்தப்படுதல் மற்றும் தண்டிக்கப்படுதல் தொடர்பான கேள்விக் கொத்து 3. Arbitrary arrest or Detentionநீதிக்குப் புறம்பான கைதுகளும் தடுத்து வைக்கப்படுதல் தொடர்பான கேள்விக் கொத்து4. Working Group on Enforced or Involuntary Disappearancesகாணமல் போனோர் தொடர்பான செயற்குழு தொடர்பான கேள்விக்கொத்து5. Individual complaint form violence against women, its causes and consequences பெண்களுக்கெதிரான வன்முறை, அதன் தோற்றுவாய் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பான தனிப்பட்ட நபர்களின் முறைப்பாட்டுக் கேள்விக்கொத்து 6. The working group on the use of mercennaries கூலிப்படைகளின் செயற்பாடுளும் செயற்குழு தொடர்பான கேள்விக்கொத்து 7. Special Rapporteur on the situation of human rights defenders Submitting complaints மனித உரிமை பாதுகாவலர்களின் நிலை தொடர்பில் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பான கேள்விக்கொத்து 8. Freedom of Opinion and Expression – Questionnaire சுதந்திரமான கருத்துப் பரிமாற்றம் தொடர்பான கேள்விக்கொத்து 9. Form to the Special Rapporteur in the field of cultural rights பண்பாட்டு விழுமியங்களை பின்பற்றதலுக்குரிய உரிமை தொடர்பான கேள்விக் கொத்து 10. Special Rapporteur on the independence of judges and lawyers நீதியாளர்களினதும் வழக்கறிஞர்களினதும் சுதந்திரமான செயற்பாடு தொடர்பான கேள்விக்கொத்து 11. Special Rapporteur on freedom of religion or belief மதசுதந்திரம் மற்றும் தனிநபர் நம்பிக்கைகளை பின்பற்றுவது தொடர்பான கேள்விக்கொத்து 12. Freedom of Peaceful Assembly and Association – Individual Complaints அமைதியாக கூடுதல் மற்றும் ஒருங்கிணைந்து செயற்படுதலுக்குரிய சுதந்திரம் – தனிப்பட்ட நபர்களின் முறைப்பாடுகள் தொடர்பான கேள்விக்கொத்து 13. Questionnaire of the independent expert on the promotion of a democratic and equitable international oderஓரு சமத்துவமான மற்றும் சனனாயகரீதியான அனைத்துலக ஒழுங்கை ஊக்குவிப்பது தொடர்பான கேள்விக் கொத்து