இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ‘புலிப்பார்வை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் மீது இன்று தாக்குதல் நடை பெற்றுள்ளது.இவ் தாக்குதலை கண்டித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் வெளியிட்ட கண்டன செய்தி :ஈழ விடுதலை அரசியலுக்கு விரோதமான, இந்திய பார்ப்பனிய அரசின் ’விடுதலைபுலிகள் எதிர்ப்பு அவதூறு பிரச்சாரத்திற்கு’ துணை செய்யும் திரைப்படமாக அமைந்திருந்த “புலிப்பார்வை” எனும் மூன்றாம்தர திரைப்படைப்பிற்கு ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பினை பதிவு செய்த மாணவ தோழர்கள் மிக மோசமாக தாக்கப்பட்ட்தை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. அத்தோடு  போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம். என்றும் தெரிவித்துள்ளனர்.இதேவேளை இந்த காட்டுமிராண்டித்தாக்குதலுக்கு இயக்குனர் கௌதமன் அவர்களும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


தாக்குதலுக்கு உள்ளான பிரதீப் திரையரங்கில் என்ன நடந்தது என்பதை விளக்குகிறார்

https://www.youtube.com/watch?v=m3lq6vffnTE

நன்றி: பதிவு