இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றனவா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்துங்கள் என்று வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையினில் 33 உறுப்பினர்கள் கூட்டாக கையெழுத்திட்டு அனுப்பிவைத்துள்ள அந்த கடிதத்தில்:-தமிழ் மக்கள் தாங்கள் சிங்கள அரசினால் இனப் படுகொலைக்குட்படுத்தப்பட்டனர் என்றும் தொடர்ந்தும் உட்படுத்தப்படுகின்றனர் என்றும் உறுதியாக நம்புகின்றனர். இறுதிப்போரில், தமிழர்கள் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்பட்டனர், அவர்களது வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டன, அவர்களது யாழ். நூலகம் அழிக்கப்பட்டது இவை எல்லாம் நடந்து முடிந்தவை. இப்போதும்கடத்தல்கள், காணாமற்போகச்செய்தல்கள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் போன்ற எல்லா அடக்குமுறைகளும் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

தமிழர் பகுதிகளில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றஙகள் இடம்பெற்றுள்ளன. இப்போதும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னமும் சொந்த இடத்தில் மீளக்குடியேற முடியாமல் பல ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு இடங்களில் வசிக்கின்றனர்.

இந்த விடையங்கள் அனைத்தையும் ஐ.நா. மனிஉரிமைகள் விசாரணைக்குழு கருத்தில் கொள்ளவேண்டும். 1974 முதல், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஐ.நா. சபை ஆராய வேண்டும். 1970, 1980, 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து இலங்கை அரசு எந்த உண்மைகளையும் வெளியிடவில்லை. உள்ளூர் பொறிமுறையான நல்லிணக்க ஆணைக்குழுவும் ஆராயவில்லை. சர்வதேச விசாரணைக்குழு இலங்கை வருவதற்க அரசு அனுமதியளிக்க மறுத்தால் தமிழ்நாட்டில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த மாதம் பதவியில் இருந்து விலகும் தாங்கள் உலகில் மனித உரிமையை நிலை நாட்டுவதற்காக மிகவும் திறமையாகச் செயற்பட்டுள்ளீர்கள். அந்தச் சேவைக்கும் பணிக்கும் எமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம். என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், பா.டெனீஸ்வரன், த.குருகுலராஜா,ஆகியோருடன் சக உறுப்பினர்களான அன்ரனி ஜெனநாதன், த.சித்தார்த்தன், அனந்தி சசிதரன், ப.அரியரத்தினம், கா.கிருஸ்ணபிள்ளை, கு.நாகேஸ்வரன், இரா.துரைரெத்தினம் உள்ளிட்ட வடக்கு,கிழக்கு மாகாண சபைகளின் 33 உறுப்பினர்கள் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.


Joint Letter from the Members of the 
 Northern Provincial Council and the Eastern Provincial Council, Sri Lanka

August 17, 2014
The Hon. Navanethem Pillay
United Nations High Commissioner for Human Rights
Office of the High Commissioner for Human Rights (OHCHR)
Palais Wilson, 52 rue des Pâquis
CH-1201 Geneva, Switzerland
Dear Honorable Madam High Commissioner Pillay,
Our Request Related to OHCHR Investigation on Sri Lanka War-Crimes
It is with utmost respect and gratitude we, the democratically elected Members of the Northern Provincial Council and the Eastern Provincial Council in Sri Lanka, jointly write this letter to you as you prepare to conclude your highly fulfilled and exceptionally accomplished service as the High Commissioner for Human Rights.  On behalf of the Tamil people, we would like to thank you for your dedicated work towards justice and accountability to the victimized Tamils in Sri Lanka. We are confident that the exemplary investigative team that you and your office have put together will ensure justice to the victims.
We would like to submit the following requests to your kind consideration and would be obliged, if you could share our request with the investigative team and also with the incoming High Commissioner:
  1. We request that the OHCHR investigative team, using the authority of the OHCHR, to look into all the past violations against the Tamil people at least from 1974 when the killings of Tamil people by the Sri Lankan forces started. There were several major incidents of massacres of Tamils in the 1970s, 1980s, 1990s and 2000s, and none of them were properly investigated by the Sri Lankan government.
  2. The Tamil people strongly believe that they have been, and continued to be subjected to Genocide by Sri Lanka. The Tamils were massacred in groups, their temples and churches were bombed, and their iconic Jaffna Public Library was burnt down in 1981 with its collection of largest oldest priceless irreplaceable Tamil manuscripts.  Systematic Sinhalese settlements and demographic changes with the intent to destroy the Tamil Nation, are taking place. We request the OHCHR investigative team to look into the pattern of all the atrocities against the Tamil people, and to determine if Genocide has taken place.
  3. If the Government of Sri Lanka continues to reject entry for the OHCHR investigative team, we request that the team considers conducting its investigation in the State of Tamil Nadu, India.
Thank you for your consideration.
Sincerely yours,
[Signed by]
  1. M. Kanagalingam Shivajilingam, Member of Northern Provincial Council
  2. Ponnuthurai Ayngaranesan, Minister of Agriculture, Northern Provincial Council
  3. Balasubramaniam Deniswaran, Minister of Fisheries, Northern Provincial Council
  4. Thambirajah Gurukularajah, Minister of Education, Northern Provincial Council
  5. Dr. Pathmanathan Sathiyalingam, Minister of Health, Northern Provincial Council
  6. M. Anthony Jeyanathan, Deputy Chairman, Northern Provincial Council
  7. Dharmalingam Sithadthan, Member of Northern Provincial Council
  8. Niththiyanantham Indrakumar, Member of Eastern Provincial Council
  9. Thavarajah Kalaiarasan, Member of Eastern Provincial Council
  10. Gnanamuththu Krishnapillai, Member of Eastern Provincial Council
  11. Kumarasamy Nageswaran, Member of Eastern Provincial Council
  12. Rassiah Thuraireththinam, Member of Eastern Provincial Council
  13. Ananthy Sasitharan, Member of Northern Provincial Council
  14. Pasupathy Ariaratnam, Member of Northern Provincial Council
  15. Emmanuel Arnold, Member of Northern Provincial Council
  16. Ayoop Azmin, Member of Northern Provincial Council
  17. Balachanran Gayatheepan, Member of Northern Provincial Council
  18. Dr. Gnanaseelan Gunaseelan, Member of Northern Provincial Council
  19. Ramanathar Indirarajah, Member of Northern Provincial Council
  20. G. Thamotharampillai Linganathan, Member of Northern Provincial Council
  21. Vinthan Kanagaratnam, Member of Northern Provincial Council
  22. Veerawahu Kanagasundraswamy, Member of Northern Provincial Council
  23. Marykamala Kunaseelan, Member of Northern Provincial Council
  24. Ariyakutty Paramsothy, Member of Northern Provincial Council
  25. Subramaniam Pasupathipillai, Member of Northern Provincial Council
  26. M. Thiyaka Rajah, Member of Northern Provincial Council
  27. Thurairajah Ravikaran, Member of Northern Provincial Council
  28. Dr. Kandiah Sarweswaran, Member of Northern Provincial Council
  29. Kesavan Sayanthan, Member of Northern Provincial Council
  30. S. Primus Siraiva, Member of Northern Provincial Council
  31. Dr. Sivapragasam Sivamohan, Member of Northern Provincial Council
  32. Velupillai Sivayogan, Member of Northern Provincial Council
  33. Santhiralingam Suhirthan, Member of Northern Provincial Council