23.08.2014 சனிக்கிழமை மiலை 6 மணிக்கு சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வு 550 ற்க்கு மேற்ப்பட்ட மக்களோடு மிக எழுச்சியோடு நடைபெற்றது.

தமிழ் இனத்தின் தேசவிடுதலைக்காக தங்கள் இனிய உயிர்களை அற்பணித்த மாவீரச்செல்வங்களுக்கு சுடர்வணக்கம் ஏற்றப்பட்டு அகவணக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து பிறேம்கோபாலோடு இணைந்து ஒஸ்லோ கலைஞர்கள் வழங்கிய மாவீரர் வணக்க நடனம், டென்மார்க் கலைஞர்கள் வழங்கிய நடனம், பாரிஸ் நகரில் சதிகாரர்களின் துப்பாக்கி சூட்டில் வீரமரணத்தை தழுவிய கேணல் பருதி அவர்களின் நினைவு நூல் மற்றும் நோர்வேயில் வாழ்ந்து வருகின்ற இளம் படைப்பாளி மாளவி சிவகணேசனின் என் தாய்நாட்டில் நான் முகவரி அற்றவளா என்ற நூல் வெளியீடுகளும், இதனைத்தொடர்ந்து பிறேம்கோபால் கீர்த்தி பிறேம்கோபால் ஒஸ்லோ கலைஞர்கள் இணைந்து வழங்கிய இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற பாடலுக்கான நடனம், இவற்றோடு நாடகம், பிறேம்கோபாலின் தனி நடனம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நோர்வே இணைப்பாளர் உரை நோர்வேயின், முன்னணிப்பாடகர்களின் சுதந்திரகானம், என்பன நடைபெற்றதோடு சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வில் இடம்பெற்ற சிறப்பு அம்சங்களான சுதந்திரத்தாண்டவம் குழுநடனப்போட்டியும் சீட்டிழுப்பும் இடம்பெற்றிருந்தது.

மிகச்சிறப்பாக நடைபெற்ற சுதந்திரத்தாண்டவம் குழுநடனப்போட்டியானது. மக்களின் சிறந்த பாராட்டைபெற்றிருந்தது இப்போட்டியில் ஒஸ்லோ பண்பாட்டு இசை பாடசாலை, பேர்கன் மாநிலத்தில் இருந்து விழிப்பு, புலத்தமிழ், சூறைக்காற்று, இலயம், பேர்கன் மாநிலத்தில் இருந்து தேசதீபம், விசுவாசம், ஆகிய குழுக்கள் மோதிக்கொண்டார்கள் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் மக்களாலும் நடுவர்களான பிறேம்போகால் கீர்த்தி பிறேம்கோபாலின் தெரிவில் முதலாம் இடத்தை சூறைக்காற்றும் இரண்டாம் இடத்தை தேசதீபமும் மூன்றாம் இடத்தை புலத்தமிழும் பெற்றுக்கொண்டார்கள்.இவர்களுக்கான பரிசாக தலா 10000 5000 2500 பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சீட்டிழுப்பு இடம்பெற்றது இதில் முதல் பரிசான உந்துருளியை 794 இலக்கமும் இரண்டாம் பரிசான தொலைக்காட்சியை 758 இலக்கமும் மூன்றாம் பரிசான ஈருருளியை 490 இலக்கமும் 10 ஆறுதல் பரிசில்களை 730, 547, 430, 066, 370, 647, 487, 214, 657, 655 என்ற இலக்கங்களும் பெற்றுக்கொண்டார்கள் இதுவரை பரிசில்களை பெற்றுக்கொள்ளாதவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மின்னஞ்சலான norgetcc@gmail.com தொர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

சுதந்திரதாகம் நிகழ்வானது காலத்தின் தேவையாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் கருதப்படுகின்றது

பூர்வீகமண்ணில் வாழமுடியாது புலத்தில் இரவல் மண்ணில் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றோம். ஆனாலும் மண்ணையும் மக்களையும் மறக்காது அவர்களின் விடுதலைக்காக காலம் காலமாக கடினமாக உழைத்து வருகின்றோம்.

ஆனாலும் இன்னும் எமது நிலம் இருண்டுதான் இருக்கின்றது சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
இன்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் எங்கள் தோள்களில்தான் விடுதலைக்கான புனிதமான பணி சுமத்தப்பட்டிருக்கின்றது.இந்த பணிகளை நாம் ஆத்மாத்தமாக முன்னெடுத்து செல்கின்ற போதுதான் எமது இனத்திற்கான சுதந்திரக்காற்றை பெற்றுக்கொடுக்க முடியும்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் பல்வேறு போராட்டக்களங்கள் சர்வதேசப்பரப்பெங்கும் திறக்கப்பட்டு விடுதலைக்கான பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதேவேளையில் தமிழ்மக்களை விடுதலைத்தாகத்தோடு ஒன்றித்து இணைப்பதர்க்கான எழுச்சி நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறான ஒன்றாகத்தான் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வும அமைந்தது.